• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • மிர்ச்சி சிவா நடிக்கும் 'சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்'

மிர்ச்சி சிவா நடிக்கும் 'சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்'

மிர்ச்சி சிவா புதிய படம்

மிர்ச்சி சிவா புதிய படம்

லார்க் ஸ்டுடியோஸ் குமார் படத்தை தயாரிக்க, விக்னேஷ் ஷா என்பவர் எழுதி இயக்குகிறார்.

  • Share this:
    மிர்ச்சி சிவா நடிக்கும் சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் படம் இன்று பூஜையுடன் தொடங்கியது.

    மிர்ச்சி சிவா நடிப்பில் வெளியான சென்னை 28, சரோஜா, தமிழ் படம், கலகலப்பு என சில திரைப்படங்கள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன. பெரும்பாலான படங்கள் வந்த சுவடு தெரியாமல் போனதே சரித்திரம். சிவா திரைக்கதை, வசனம் எழுதி நடித்த சுமோ திரைப்படம் பல வருடங்களாகியும் இன்னும் வெளியாகவில்லை. ஓடிடியில் படத்தை வெளியிட பேச்சுவார்த்தை நடக்கிறது. வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்த பார்ட்டி திரைப்படமும் பல வருடங்களாக பெட்டிக்குள் முடங்கியுள்ளது.

    இந்தப் படங்களுக்குப் பிறகு சிவா நடித்த படம் இடியட். ராம்பாலா இயக்கியிருக்கும் இப்படம் விரைவில் வெளிவர உள்ளது. இவை தவிர சலூன் என்ற படத்திலும், ஆர்.கண்ணன் இயக்கத்தில் காசேதான் கடவுளடா படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில், அவர் நடிக்கும் புதிய படத்தின் பூஜை இன்று நடந்தது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Single Shankarum Smartphone Simranum starring Mirchi Siva,  actor shiva twitter, siva tamil actor movies, mirchi siva new movie, shiva movie list tamil, shiva new movie 2021, 3 idiots tamil movie release date, மிர்ச்சி சிவா, சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட்ஃபோன் சிம்ரனும், மிர்ச்சி சிவா புதிய திரைப்படம், சிவா திரைப்பட பட்டியல் தமிழ், சிவா புதிய திரைப்படம் 2021
    பட போஸ்டர்


    இந்தப் படத்துக்கு சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் என பெயர் வைத்துள்ளனர். லார்க் ஸ்டுடியோஸ் குமார் படத்தை தயாரிக்க, விக்னேஷ் ஷா என்பவர் எழுதி இயக்குகிறார். ரொமான்டிக் காமெடியாக இந்தப் படம் தயாராகிறது. இன்று நடந்த பூஜையில் சிவா, இயக்குனர், தயாரிப்பாளர் உள்பட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: