தனது காதலை உறுதி செய்த த்ரிஷா... ஆனால் காதலன் யார்?

news18
Updated: May 27, 2019, 2:14 PM IST
தனது காதலை உறுதி செய்த த்ரிஷா... ஆனால் காதலன் யார்?
நடிகை த்ரிஷா
news18
Updated: May 27, 2019, 2:14 PM IST
ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்த த்ரிஷா தான் காதலில் விழுந்துள்ளதை உறுதிசெய்துள்ளார்.

1999-ம் ஆண்டு மிஸ் சேலம், மிஸ் மெட்ராஸ் போன்ற போட்டிகளில் வெற்றிபெற்ற த்ரிஷா, ஜோடி படத்தில் சிம்ரனின் தோழியாக கூட்டத்தில் வந்துபோகும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்தார். அதன்பின் லேசா லேசா, மௌனம் பேசியதே படங்களின் மூலம் வெள்ளித்திரையில் நாயகியாக அறிமுகமான அவர், சாமி, கில்லி என அடுத்தடுத்த வெற்றிகளின் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி நாயகியாக உயர்ந்தார்.

ரஜினி, கமல், விஜய், அஜித்தில் தொடங்கி சிம்பு, தனுஷ், விஜய் சேதுபதி என இன்றைய தலைமுறை நடிகர்கள் என முன்னணி நாயகர்களுடன் நடித்த ஒரே நடிகை எனும் சிறப்பு அந்தஸ்து த்ரிஷாவுக்கு உண்டு.அவ்வப்போது அவரைப் பற்றிய காதல் கிசுகிசுக்களும் வெளியாவது வழக்கம். நடிகர் ராணா - த்ரிஷா காதலித்து வருவதாக சில ஆண்டுகள் பேசப்பட்டது. பின்னர் தயாரிப்பாளர் வருண் மணியனுடன் திருமணம் நடக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது. ஆனால் தனது திருமணம் குறித்த எந்த ஒரு அறிவிப்பையும் த்ரிஷா வெளியிடாமல் மவுனம் காத்து வருகிறார்.

த்ரிஷா தொடர்ச்சியாக படங்களில் நடித்து வரும் நிலையில் அவரது நடிப்பில் உருவாகியுள்ள ராங்கி பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. அப்போது சமூகவலைதளத்தில் ரசிகர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கும் அவர் பதிலளித்துள்ளார். அதில் ரசிகர் ஒருவர் உங்களுடைய ரிலேஷன்ஷிப் ஸ்டேட்டஸ் என்ன என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பதிலளித்த த்ரிஷா “சிங்கிள் பட் டேக்கன்” என்று கூறியுள்ளார்.த்ரிஷாவின் இந்த பதிலால் அவர் தற்போது ஒருவரை காதலித்து வருவதாக பேசப்படுகிறது. மேலும் தனது திருமணம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “Do it when it's a want and not a need” என்று கூறியுள்ளார்.

த்ரிஷா நடிப்பில் கர்ஜனை, சதுரங்க வேட்டை 2, பரமபத விளையாட்டு, ராங்கி உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகின்றன.

தன்னிகரில்லா 'தல' அஜித் அறிமுகப்படுத்திய முன்னணி இயக்குநர்கள்!

First published: May 27, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...