ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ஏ.ஆர் ரஹ்மான் தேடும் அந்த சகோதரிகள்.. அட நம்ம ஸ்ரீ சிஸ்டர்ஸ் தாங்க!

ஏ.ஆர் ரஹ்மான் தேடும் அந்த சகோதரிகள்.. அட நம்ம ஸ்ரீ சிஸ்டர்ஸ் தாங்க!

A R Rahman | ஒரு கட்டத்தில் சோகத்தில் உறையும் ஸ்ரீசக்திக்கு ஆதரவாக அவளது சகோதிரியான ஸ்ரீமதி "சேர்ந்து நாம் பாடினால் ஏக்கங்கள் நமை விட்டு நீங்குமே" என்று கூறி பாட தொடங்குகிறாள்.

A R Rahman | ஒரு கட்டத்தில் சோகத்தில் உறையும் ஸ்ரீசக்திக்கு ஆதரவாக அவளது சகோதிரியான ஸ்ரீமதி "சேர்ந்து நாம் பாடினால் ஏக்கங்கள் நமை விட்டு நீங்குமே" என்று கூறி பாட தொடங்குகிறாள்.

A R Rahman | ஒரு கட்டத்தில் சோகத்தில் உறையும் ஸ்ரீசக்திக்கு ஆதரவாக அவளது சகோதிரியான ஸ்ரீமதி "சேர்ந்து நாம் பாடினால் ஏக்கங்கள் நமை விட்டு நீங்குமே" என்று கூறி பாட தொடங்குகிறாள்.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

சின்னத்திரை பாடல் நிகழ்ச்சி நட்சத்திரங்களான ஸ்ரீமதி மற்றும் ஸ்ரீசக்தி என்கிற இரண்டு சகோதிரிகளும். சமூக வலைதளங்களின் வழியாக ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் ஆன ஏ.ஆர் ரஹ்மானின் கவனத்தை ஈர்த்துள்ளனர்.

சிங்கிங் ஸ்டார்ஸ் நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்கள் வெளியிட்ட ஒரு ப்ரோமோ வீடியோ வழியாக, இந்த சகோதரிகள் இருவரும் தங்களது குரல் மற்றும் நடிப்பு திறனால் பெரும் அளவிலான ரசிகர்களை ஈர்த்தனர். குறிப்பிட்ட நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்கள் வெளியிட்ட ப்ரோமோ வீடியோவில், மீனவ சமூகத்தை சேர்ந்தவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைப் பிரதிபலிக்கும் ஒரு பாடலை ஸ்ரீமதி - ஸ்ரீசக்தி சகோதிரிகள் பாடுகிறார்கள்.

"சிங்கிங் ஸ்டார்ஸ் ஆடிஷன்ஸ், இடம் : கஜா புயல் நிவாரண மையம், நாகப்பட்டினம்" என்கிற பேனருக்கு முன் நிற்கும் ஸ்ரீசக்தி, "பேரலை போலவே பேரன்பில் என் சொந்தம் வாழ்ந்ததே" என தொடங்கும் பாடலை பாட தொடங்குகிறாள். அந்த பாடலின் வாயிலாக கடற்கரையோர குடிசையில், மகிழ்ச்சியாக வாழும் அவளது குடும்பத்தையும், மீன்பிடிக்க சென்ற அவளது தந்தை கைதாகி போனதையும், புயலால் அவளது வீடு நாசமாகி போவதையும் காட்சிப்படுத்துகிறார்கள்.

ஒரு கட்டத்தில் சோகத்தில் உறையும் ஸ்ரீசக்திக்கு ஆதரவாக அவளது சகோதிரியான ஸ்ரீமதி "சேர்ந்து நாம் பாடினால் ஏக்கங்கள் நமை விட்டு நீங்குமே" என்று கூறி பாட தொடங்குகிறாள். இப்படியாக மிகவும் நெகிழ்ச்சியாக முடியும் இந்த ப்ரோமோ வீடியோ பார்க்கும் அனைவரையும் உணர்ச்சி வசத்தில் ஆழ்த்தியது. இதனால் ஸ்ரீமதி - ஸ்ரீசக்தி சகோதிரிகளின் இந்த ப்ரோமோ வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.

குறிப்பிட்ட வீடியோ இணையத்தில் வைரலாக சுற்றிக் கொண்டிருக்கும் போதே அது ஆஸ்கர் நாயகன், நம்ம இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மானின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதயத்தை உடைக்கும் ஸ்ரீமதி - ஸ்ரீசக்தி சகோதிரிகளின் பாடல் வரிகள், நடிப்பு மற்றும் ப்ரோமோ வீடியோ படமாக்கப்பட்ட விதம் ஆகியவற்றை பார்த்து நெகிழ்ந்து போன ஏ.ஆர் ரஹ்மான் தனது இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் வழியாக அதை பகிர்ந்தார்.
 
View this post on Instagram

 

A post shared by ARR (@arrahman)அந்த பதிவில், “இந்த இரண்டு சகோதரிகளும் இந்த பாடலின் வழியாக சில தீவிரமான கேள்விகளைக் கேட்கிறார்கள்” என்றும் ஏ.ஆர் ரஹ்மான் தன் கருத்தை, ஒரு தலைப்பாக இட்டுள்ளார். ‘சிங்கிங் ஸ்டார்ஸ்’ என்ற மியூசிக் ரியாலிட்டி ஷோவில் போட்டியிடும் ஸ்ரீமதி ஸ்ரீசக்தி சகோதரிகள் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். இவர்கள் கஜா புயலால் தங்களது வாழ்வாதாரத்தை இழந்தவர்களும் ஆவார்கள்.

ஸ்ரீமதி - ஸ்ரீசக்தி ஆகிய இருவரும் சிங்கிங் ஸ்டார்ஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டாலும் கூட, நிகழ்ச்சியின் மற்ற போட்டியாளர்கள் மற்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுடன் லைவ் ரெக்கார்டிங் அமர்வில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்றனர். ஷக்திஸ்ரீ கோபாலன் மற்றும் பாடகர் அனந்து ஆகியோருடன் முதன்மை நடுவராக இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் சின்னத்திரையில் அறிமுகமானதும் இந்த நிகழ்ச்சியின் வாயிலாக தான்!

Published by:Selvi M
First published:

Tags: AR Rahman, Singer