Home /News /entertainment /

எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் - மனைவிக்கும் கொரோனா உறுதி

எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் - மனைவிக்கும் கொரோனா உறுதி

எஸ்.பி பாலசுப்பிரமணியம்

எஸ்.பி பாலசுப்பிரமணியம்

SP Balasubrahmanyam | கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல பிண்ணனி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிமணியத்தின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
    பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு கொரோனா நோய் தொற்று உறுதியானதால் கடந்த 5-ம் தேதி, சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    இதையடுத்து, அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதனிடையே, தனது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவர் வீடியோ வெளியிட்டார். இந்நிலையில், திடீரென உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால், அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு செயற்கை சுவாசம் அளிக்கப்படுவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவரின் உடல்நிலையை மருத்துவ வல்லுநர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    Published by:Sankar
    First published:

    Tags: CoronaVirus, S.P.Balasubramaniyam

    அடுத்த செய்தி