'பாலு சீக்கிரம் வா...’ மருத்துவமனையில் உள்ள எஸ்.பி.பி.க்காக இளையராஜா உருக்கம்

SP Balasubrahmanyam | கொரோனா பாதித்து மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள எஸ்.பி பாலசுப்பிரமணியம் குறித்து இளையராஜா உருக்கமான வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்

'பாலு சீக்கிரம் வா...’ மருத்துவமனையில் உள்ள எஸ்.பி.பி.க்காக இளையராஜா உருக்கம்
இளையராஜா
  • News18
  • Last Updated: August 14, 2020, 10:19 PM IST
  • Share this:
பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு கொரோனா நோய் தொற்று உறுதியானதால் கடந்த 5-ம் தேதி, சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இதனிடையே, தனது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவர் வீடியோ வெளியிட்டார். இந்நிலையில், திடீரென உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால், அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு செயற்கை சுவாசம் அளிக்கப்படுவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவரின் உடல்நிலையை மருத்துவ வல்லுநர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் விரைந்து உடல் நலம் பெற வேண்டும் என முன்னணி நடிகர், நடிகைகள், இசையமைப்பாளர்கள், பாடகர்கள் உள்ளிட்டோர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளனர். எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்காக பிரார்த்திக்குமாறு நடிகர் தனுஷ் பதிவிட்டுள்ள நிலையில், துக்கம் மனதை பிசைகிறது என இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் கூறியுள்ளார்.


இதேபோல், இசையமைப்பாளர்கள் ஏ.ஆர்.ரகுமான், அனிருத், தினா, தமன், இயக்குநர் ஹரி, நடிகர்கள் பிரசன்னா, யோகி பாபு உள்ளிட்டோரும், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் விரைந்து நலம் பெற வேண்டும் என டுவிட்டரில் பதிவிட்டுள்ளனர். மேலும், நடிகைகள் குஷ்பூ, ராதிகா பிரபல இந்தி பட தயாரிப்பாளர் போனி கபூர், பாடகி சின்மயி, கிரிக்கெட் வீரர் அஸ்வின் ஆகியோரும், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் விரைந்து நலம் பெற வேண்டும் என்றும், அதற்காக பிரார்த்திக்குமாறும் பதிவு செய்துள்ளனர்.





எஸ்.பி.பி.யின் நெருங்கிய நண்பரும், இசையமைப்பளருமான இளையராஜா உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.



சீக்கிரம் எழுந்து வா பாலு என்றும் அந்த வீடியோவில் இளையராஜா குறிப்பிட்டுள்ளார்.
First published: August 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading