Shreya Ghoshal: வெளியுலகிற்கு மகனை அறிமுகப்படுத்திய ஷ்ரேயா கோஷல்!

மகனுடன் இளையராஜா

தற்போது தங்கள் குழந்தையை வெளியுலகத்துக்கு அறிமுகப்படுத்தியுள்ளார் ஷ்ரேயா.

  • Share this:
    பாடகி ஷ்ரேயா கோஷல் தனது மகனை வெளியுலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளார்.

    தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் முன்னணி பாடகியாக திகழ்பவர் நடிகை ஸ்ரேயா கோஷல். இவரின் குரலுக்கு அடிமையாகாதவர்களே இல்லை எனும் அளவுக்கு, அவ்வளவு அழகான குரலுக்கு சொந்தக்காரராக திகழ்கிறார். இவர் கடந்த 2015-ஆம் ஆண்டு தனது நண்பரும் தொழிலதிபருமான ஷைலாதித்யா முகோபாத்யாயாவை திருமணம் செய்துக்கொண்டார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    திருமணத்துக்குப் பிறகு தொடர்ந்து பாடி வந்த ஸ்ரேயா, கடந்த மார்ச் 4-ஆம் தேதி தான் கர்ப்பம் தரித்துள்ளதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், ஷ்ரேயா கோஷலுக்கு கடந்த 22-ம் தேதி மதியம் ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து அவருக்கு பிரபலங்களும், ரசிகர்களும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.



    இதையடுத்து தற்போது தங்கள் குழந்தையை வெளியுலகத்துக்கு அறிமுகப்படுத்தியுள்ளார் ஷ்ரேயா. மகனுக்கு தேவ்யான் முகோபாத்யாயா என்று பெயர் வைத்துள்ள அவர், ’மகன் பிறந்த அந்த முதல் பார்வையில் ஒரு விதமான அன்பினால் எங்கள் இதயங்களை நிரப்பிவிட்டார். தாய் மற்றும் தந்தையால் மட்டுமே இதை உணர முடியும். இது இன்னும் ஒரு கனவு போலவே இருக்கிறது. கணவர் மற்றும் வாழ்க்கையின் இந்த அழகான பரிசுக்கு நான் மிகவும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: