Shreya Ghoshal: ஆண் குழந்தைக்கு தாயான பாடகி ஷ்ரேயா கோஷல்!

ஷ்ரேயா கோஷல்

’கடவுள் அருளால் இன்று மதியம் எங்களுக்கு விலைமதிப்பற்ற ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதுபோன்ற ஒரு மகிழ்ச்சியான உணர்வை இதற்கு முன்பு அடைந்ததில்லை.'

  • Share this:
    பாடகி ஸ்ரேயா கோஷல் தனக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கும் மகிழ்ச்சியான விஷயத்தை சமூக வலைதளங்களில் அரிவித்துள்ளார்.

    தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் முன்னணி பாடகியாக திகழ்பவர் நடிகை ஸ்ரேயா கோஷல். இவரின் குரலுக்கு அடிமையாகாதவர்களே இல்லை எனும் அளவுக்கு, அவ்வளவு அழகான குரலுக்கு சொந்தக்காரராக திகழ்கிறார். இவர் கடந்த 2015-ஆம் ஆண்டு தனது நண்பரும் தொழிலதிபருமான ஷைலாதித்யா முகோபாத்யாயாவை திருமணம் செய்துக்கொண்டார்.

    திருமணத்துக்குப் பிறகு தொடர்ந்து பாடி வந்த ஸ்ரேயா, கடந்த மார்ச் 4-ஆம் தேதி தான் கர்ப்பம் தரித்துள்ளதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், ஷ்ரேயா கோஷலுக்கு இன்று மதியம் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை, தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.



    அதில், ’கடவுள் அருளால் இன்று மதியம் எங்களுக்கு விலைமதிப்பற்ற ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதுபோன்ற ஒரு மகிழ்ச்சியான உணர்வை இதற்கு முன்பு அடைந்ததில்லை. நான், எனது கணவர் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் அளவுக் கடந்த மகிழ்ச்சியில் இருக்கிறோம். உங்களது வாழ்த்துக்களுக்கு என்ற நன்றி’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

    தொழில்முறையைப் பொறுத்த வரை, "அங்கனா மோரி"-க்குப் பிறகு, ஸ்ரேயா கோஷல் டோனி கக்கருடன் இணைந்து "ஓ சனம்" என்ற தனிப்பாடலை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: