ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பல்லாவரம் வார சந்தையில் புஷ்பவனம் குப்புசாமியிடம் செல்போன் திருட்டு

பல்லாவரம் வார சந்தையில் புஷ்பவனம் குப்புசாமியிடம் செல்போன் திருட்டு

புஷ்பவனம் - அனிதா குப்புசாமி

புஷ்பவனம் - அனிதா குப்புசாமி

தோட்டத்தை பராமரிக்க தேவையான உபகரணங்கள், பூச்சி மருந்துகள் போன்ற அனைத்தும் சந்தையில் கிடைக்கும் என்பதால், அதனை வாங்குவதற்காக புஷ்பவனம் குப்புசாமி சென்றுள்ளார்.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

தமிழகத்தைச் சேர்ந்த பிரபல கிராமிய மற்றும் சினிமா பாடகர் புஷ்பவனம் குப்புசாமி. இவர் தமிழக அரசின் கலைமாமணி விருதையும் பெற்றுள்ளார். இவரது மனைவி அனிதாவும் பிரபல கிராமிய பாடகியாக உள்ளார். சென்னை பல்கலைக்கழகத்தில் படித்த காலத்தில் பல்வேறு போட்டிகள் மற்றும் கச்சேரிகளில் இருவரும் ஒன்றாக பழகி வந்த நிலையில், காதல் மலர்ந்தது. அதன் பின்னர் இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

தம்பதி இருவரும் சினிமா, மேடை நிகழ்ச்சிகள், டிவி நிகழ்ச்சிகள் வெளிநாடு என இசை நிகழ்ச்சிகளில் பிசியாக வலம் வந்து கொண்டிருந்தாலும், மாடி தோட்டம் அமைப்பது, அதில் பராமரிப்பு போன்ற விஷயங்களிலும் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். இதையெல்லாம் ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்ள அனிதா குப்புசாமி சொந்தமாக யூடியூப் சேனலும் வைத்துள்ளார். அதில் வீட்டின் மாடித்தோட்டம், பூஜையறை, சமையல் குறிப்புகள் என பல வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். மாடி தோட்டத்திலும், வீட்டை சுற்றிலும் செடி வைப்பது, பராமரிப்பது போன்ற பல்வேறு வேலைகளில் அனிதாவை விட புஷ்பவனம் குப்புசாமி தான் தீவிரமாக ஈடுபடக்கூடியவர்.

also read : பீஸ்ட் பாடலுக்கு குக் வித் கோமாளி பிரபலங்கள் போட்ட குத்தாட்டம்! வைரல் வீடியோ..

இந்நிலையில், காய்கறிகள் செடி மற்றும் இதர விதைகள் உள்ளிட்ட தோட்டத்திற்கு தேவையான செடிகளை வாங்குவதற்காக புஷ்பவனம் குப்புசாமி நேற்று பல்லாவரம் சந்தைக்கு வந்துள்ளார். சென்னை விமான நிலையம் அருகே வெள்ளிக்கிழமை தோறும் பிரம்மாண்டமாக பல்லாவரம் சந்தை கூடுவது வழக்கம். இங்கு செடிகள் முதல் கம்யூட்டர் வரை அனைத்துமே மலிவு விலையில் கிடைக்கும் என்பதால், ஆயிரக்கணக்கான மக்கள் பொருட்களை வாங்க குவிவார்கள்.

பல்லாவரம் சந்தையில் பல வகையான செடிகள், காய்கறி மற்றும் பூக்களின் விதைகள், மரக்கன்றுகள், தோட்டத்தை பராமரிக்க தேவையான உபகரணங்கள், பூச்சி மருந்துகள் போன்ற அனைத்தும் கிடைக்கும் என்பதால், அதனை வாங்குவதற்காக புஷ்பவனம் குப்புசாமி சென்றுள்ளார். அப்போது கூட்ட நெரிசலில் புஷ்பவனம் குப்புசாமியின் செல்போனை மர்ம நபர்கள் திருடியுள்ளனர். அதன் மதிப்பு மட்டும் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து பல்லாவரம் காவல்நிலையத்தில் புஷ்பவனம் குப்புசாமி புகார் அளித்துள்ள நிலையில், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

also read : இதற்கு முன்பு பிக் பாஸ் ஷிவானியை இப்படி பார்த்து இருக்கவே மாட்டீங்க! வைரல் வீடியோ

சந்தையில் பிரபல பாடகரின் விலை உயர்ந்த செல்போன் திருடுபோன சம்பவம் பரபரப்பைக் கிளப்பிய நிலையில், மற்றொரு அதிர்ச்சி தகவலும் கிடைத்துள்ளது. அதாவது நேற்று ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லியில் இருந்து சென்னை திரும்பியதால் போலீசார் அனைவரும் சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு பணிக்காக குவிந்துள்ளனர். இதனால் பல்லாவரம் சந்தைக்கு யாரும் பாதுகாப்பு பணிக்கு வரவில்லை எனக் கூறப்படுகிறது. இதனை நன்கு அறிந்த மர்ம கும்பல், சந்தையின் கூட்டநெரிசலில் புஷ்பவனம் குப்புசாமி உட்பட 7 நபர்களின் செல்போனை திருடியது  தெரியவந்துள்ளது.

Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Pushpavanam kuppusamy, Singer