முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / இதெல்லாம் ஒரு பாட்டா? சமந்தாவின் பிரபல பாடலை கடுமையாக விமர்சித்த பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி!

இதெல்லாம் ஒரு பாட்டா? சமந்தாவின் பிரபல பாடலை கடுமையாக விமர்சித்த பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி!

எல்.ஆர்.ஈஸ்வரி

எல்.ஆர்.ஈஸ்வரி

இப்போது வரும் பாடல்கள் எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை, இதெல்லாம் ஒரு பாட்டா என பிரபல நடிகையின் பாடலை கடுமையாக விமர்சித்துள்ளார் பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

தேனினும் இனிமையான குரலால் பி.சுசிலாவும் மறுபக்கம் தென்றலென தவழ்ந்த குரலால் எஸ்.ஜானகியும் இசை ரசிகர்களை கட்டி போட்டிருந்த காலம் அது. இவ்விரு கான மலைகளுக்கிடையே ஒர் புது வெள்ளம் ஒன்று கந்தர்வ குயிலாய் பாட தொடங்கியது. அவர்தான் எல்.ஆர்.ஈஸ்வரி. இவர் பாடிய பாடலில் மதி மயங்கிய தமிழ் சினிமா பாச மலர் தூவி வரவேற்றது. ஆம்.. ’பாச மலர்’ திரைப்படத்தில் எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய ’வாராயோ தோழி வாராயோ’ பாடல் எல்.ஆர்.ஈஸ்வரியை வாராயோ தோழி என சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றது தமிழ் சினிமா.

“ஆடவரரெல்லாம் ஆட வரலாம்…”,“மலரென்ற முகம் ஒன்று..” என்று எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய பல பாடல்கள் அன்னாளில் இளம் ரசிகர்களை ஆடவைத்த அதே பொழுதில் அவரின் "அம்மம்மா கேளடி தோழி'' பாடலில் தன் தூக்கத்தை தொலைத்தனர். ’கறுப்பு பணம்’ திரைப்படத்தில் இடம்பெற்ற இந்த பாடல் காட்சிகள் கருப்பு வெள்ளையானாலும் எல்.ஆர்.ஈஸ்வரியின் குரல் ஆயிரம் வண்ணங்களை ரசிகர்களிடத்தில் நிறைத்திருந்தது.

சினிமா பாடல்கள் மட்டுமின்றி பக்திப் பாடல்கள் உலகிலும் தனக்கென்று தனி இடத்தை பிடித்தார் எல்.ஆர்.ஈஸ்வரி. ஆடி மாதம் ஆனாலே ஒவ்வொரு அம்மன் கோயிலிலும் குழாய் ஸ்பீக்கரில் எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய “கற்பூர நாயகியே கனகவல்லி” பாடலும்… ’செல்லாத்தா செல்ல மாரியாத்தா’ பாடலும் இப்போதும் ஒலிப்பதை கேட்கலாம்.  ஆடி மாதம் என்ரொன்று உண்டென்றால் நிச்சயம் அங்கே ஒலித்து கொண்டிருக்கும் எல்.ஆர்.ஈஸ்வரியின் குரல்.

இப்படி தமிழ் இசை உலகில் தவிர்க்க முடியாத நாயகியான ஈஸ்வரி, சினிமா வாழ்க்கை மற்றும் இப்போதைய பாடல்கள் குறித்து மனம் திறந்து பேசி உள்ளார். எல்.ஆர்.ஈஸ்வரி அளித்துள்ள பேட்டியில், ''இப்போது வரும் பாடல்கள் எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. சமீபத்தில் ஓ சொல்றியா மாமா பாடலை கேட்டேன். அதெல்லாம் ஒரு பாடலா? ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை ஒரே மாதிரி இருந்தது. பாடகர்களுக்கு என்ன தெரியும். சொல்லியபடி பாடி விடுகிறார்கள்.

அதே பாடல் என்னிடம் வந்திருந்தால் அந்த கலரே வேறு. நாங்கள் எவ்வளவோ சின்சியராக பணி செய்தோம். மியூசிக் டைரக்டர் இதையெல்லாம் கவனிக்க வேண்டும் என்றும் எல்.ஆர்.ஈஸ்வரி தெரிவித்துள்ளார்.

புஷ்பா படத்தில் வந்த ஓ சொல்ரியா பாடலுக்கு நடிகை சமந்தா நடனம் ஆடி இருப்பார். புஷ்பா படத்தின் விளம்பரத்துக்கு அந்த பாடல் மிகப்பெரிய பலமாக இருந்தது. பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பிய அந்த பாடலின் ஒரிஜினல் வெர்ஷனான தெலுங்கும் செம ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Movie Songs, Samantha