Thalapathy Vijay: தளபதி 66 படத்தை இயக்குகிறாரா தெலுங்கு இயக்குநர் வம்சி -ட்வீட்டை டெலிட் செய்த பிரபல பாடகர்

விஜய்

தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் அடுத்தப் படம் இயக்கவுள்ளார் என்று பிரபல பாடகர் கிரிஷ் பதிவிட்ட ட்வீட்டை அவரே நீக்கியுள்ளார். அதன் ஸ்கீரின்ஸாட் இணையத்தில் வைரலாகிவருகிறது.

  • Share this:
    'மகர்ஷி இயக்குநர்' வம்ஷி பைடிபள்ளி நேற்று தனது 42-வது பிறந்தநாளை கொண்டாடினார். இவருக்கு ரசிகர்களும், பிரபலங்களும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர். 'தளபதி 66' படத்திற்காக அவர் விஜய்யுடன் இணைவார் என்று முன்னரே யூகிக்கப்பட்டிருந்தாலும், பாடகர் கிரிஷ் இதை உறுதிப்படுத்தியுள்ளார். ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை.

    தளபதி விஜய் தனது அடுத்தப் படத்தில் நேரடியாக தெலுங்கில் அறிமுகமாகவுள்ளதாகத் தெரிகிறது. தில் ராஜு தயாரிக்கும் இப்படம் தமிழ்-தெலுங்கு என ஒரே நேரத்தில் இருமொழிகளில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. இதற்கிடையே இயக்குநர் வம்சியை வாழ்த்திய பாடகர் கிரிஷ், ”எனக்கு பிடித்த நபர் மற்றும் இயக்குனர் வம்ஷிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். என் நண்பருக்கு இது அற்புதமான ஆண்டாக இருக்க வாழ்த்துக்கள். விஜய் அண்ணாவுடன் உங்கள் அடுத்தப் படத்திற்கு காத்திருப்பு மற்றும் வாழ்த்துக்கள்” எனத் தெரிவித்திருந்தார்.

    Singer Krish confirms Vijay next with Vamshi Paidipally for Thalapathy 66, thalapathy 66, thalapathy vijay, thalapathy 66 movie, vamshi paidiapally, vijay next movie, thalapathy 66, தளபதி 66, தளபதி விஜய், தளபதி 66 படம், விஜய் படம், vijay telugu movie, விஜய் வம்சி, விஜய் தெலுங்கு படம்
    கிரிஷ் ட்வீட்


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இருப்பினும், இப்போது பாடகர் கிரிஷ் இந்த ட்வீட்டை நீக்கியுள்ளார், ஆனால் அதன் ஸ்கிரீன் ஷாட் சமூக ஊடகங்களில் வலம் வருகிறது.

    இதற்கிடையே விஜய் தற்போது, நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைப்பது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: