பிரபல பாடகர் கே.கே மாரடைப்பால் காலமானார். அவரது சிறந்த தமிழ் பாடல்களை இங்கே பட்டியலிடுகிறோம்.
பிரபல பின்னணி பாடகர் கிருஷ்ணகுமார் குன்னாத். எல்லோராலும் கே.கே என்று அறியப்படுகிறார். டெல்லியை பூர்வீகமாகக் கொண்ட அவர், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடா, மலையாளம் என இந்தியாவின் முக்கிய மொழித் திரைப்படங்களில் பல பாடங்களைப் பாடியுள்ளார்.
இந்நிலையில் நேற்று கொல்கத்தாவிலுள்ள குருதாஸ் நஸ்ரூல் மன்சா கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாடல் பாடும்போது அவருக்கு உடல்நலக் குறைபாடு ஏற்பட்டுள்ளது. பின்னர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கேகே ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்திருக்கிறார்கள். இதையடுத்து கே.கே-வின் மறைவுக்கு பிரபலங்களும், ரசிகர்களும் தங்கள் அஞ்சலியை தெரிவித்து வருகிறார்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அவர் பாடிய சிறந்த தமிழ் பாடல்களை இங்கே பதிவிடுகிறோம்.
மின்சாரா கனவு (1997): ஸ்ட்ராபெரி கண்ணே (இசையமைப்பாளர் - ஏ.ஆர். ரஹ்மான்)
12B (2001): லவ் பண்ணு - ஒரு புன்னகை பூவே (இசையமைப்பாளர் - ஹாரிஸ் ஜெயராஜ்)
ஷாஜகான் (2001): காதல் ஒரு (இசையமைப்பாளர் - மணி ஷர்மா)
ரெட் (2002): ஒல்லிக்குச்சி உடம்புக்காரி (இசையமைப்பாளர் - தேவா)
காக்க காக்க (2003): உயிரின் உயிரே (இசையமைப்பாளர் - ஹாரிஸ் ஜெயராஜ்)
தூள் (2003): குண்டு குண்டு குண்டு பெண்ணே (இசையமைப்பாளர் - வித்யாசாகர்)
செல்லமே (2004): காதலிக்கும் ஆசை (இசையமைப்பாளர் - ஹாரிஸ் ஜெயராஜ்)
கில்லி (2004): அப்படி போடு (இசையமைப்பாளர் - வித்யாசாகர்)
எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி (2004): வச்சிக்க வச்சிகவா இடுப்புல (இசையமைப்பாளர் - ஸ்ரீகாந்த் தேவா)
எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி (2004): நீயே நீயே (இசையமைப்பாளர் - ஸ்ரீகாந்த் தேவா)
மன்மதன் (2004): காதல் வளர்த்தேன் (இசையமைப்பாளர் - யுவன் ஷங்கர் ராஜா)
அந்நியன் (2005): அண்டங்காக்கா கொண்டக்காரி (இசையமைப்பாளர் - ஹாரிஸ் ஜெயராஜ்)
ஆதி (2006): லேலக்கு லேலக்கு லேலா (இசையமைப்பாளர் - வித்யாசாகர்)
தாமிரபரணி (2007): வார்த்தை ஒண்ணு (இசையமைப்பாளர் - யுவன் ஷங்கர் ராஜா)
குட்டி (2010): ஃபீல் மை லவ் (இசையமைப்பாளர் - தேவி ஸ்ரீ பிரசாத்)
இப்படி பல சிறந்த பாடல்களைப் பாடியுள்ளார் கேகே.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Tamil Cinema