ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

தி லெஜண்ட் படத்திற்காக தனது கடைசி பாடலை பாடிய கே.கே.

தி லெஜண்ட் படத்திற்காக தனது கடைசி பாடலை பாடிய கே.கே.

லெஜண்ட் படக்குழுவினருடன் பாடகர் கேகே.

லெஜண்ட் படக்குழுவினருடன் பாடகர் கேகே.

கொல்கத்தா நியூ மார்க்கெட் போலீசார் கேகேவின் மரணத்தை இயற்கைக்கு மாறான மரணம் என்று வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

தி லெஜண்ட் படத்திற்காக கேகே தனது கடைசி பாடலை பாடியுள்ளார். இந்த பாடலை ரிக்கார்டு செய்யும் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

பிரபல பின்னணி பாடகர் கிருஷ்ணகுமார் குன்னாத்  எல்லோராலும் கே.கே என்று அறியப்படுகிறார். டெல்லியை பூர்வீகமாகக் கொண்ட அவர், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடா, மலையாளம் என இந்தியாவின் முக்கிய மொழித் திரைப்படங்களில் பல பாடங்களைப் பாடியுள்ளார்.

இந்நிலையில் நேற்று கொல்கத்தாவிலுள்ள குருதாஸ் நஸ்ரூல் மன்சா கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாடல் பாடும்போது அவருக்கு உடல்நலக் குறைபாடு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க - 36 வருடங்களுக்கு முன்பு வெளியான கமலின் விக்ரம் வசூல் எவ்வளவு தெரியுமா?

பின்னர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கேகே ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்திருக்கிறார்கள். இதையடுத்து கே.கே-வின் மறைவுக்கு பிரபலங்களும், ரசிகர்களும் தங்கள் அஞ்சலியை தெரிவித்து வருகிறார்கள்.

அவர் மறைவுக்கு முன்பாக சரவணன் நடிப்பில் உருவாகியுள்ள தி லெஜண்ட் படத்திற்காக தனது கடைசி சினிமா பாடலை பாடியுள்ளார். இந்த பாடல் ரிக்கார்டு செய்யும்போது எடுக்கப்பட்ட வீடியோவை தி லெஜண்ட் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

கேகே மறைவுக்கு பிரதமர் மோடி, ராகுல் காந்தி, திரையுலகத்தினர், விளையாட்டுத்துறையினர், பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, கொல்கத்தா நியூ மார்க்கெட் போலீசார் கேகேவின் மரணத்தை இயற்கைக்கு மாறான மரணம் என்று வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வாத்தி கம்மிங் பாடலுக்கு அட்டகாச நடனமாடிய ரன்வீர் சிங்! 

கேகேவுக்கு வயது 53 என்றாலும் பார்ப்பதற்கு 40 வயதுடையவர் போன்ற தோற்றத்திலேயே இருப்பார். அவரது மரணம் திரைத்துறையை உலுக்கி வருகிறது.

First published:

Tags: Singer