Home /News /entertainment /

’ஒரு சகாப்தம் முடிந்தது, இசையும், உலகமும் பழையபடி இருக்காது.. நன்றி கூற எனக்கு வார்த்தைகள் போதாது’ - பாடகி சித்ரா

’ஒரு சகாப்தம் முடிந்தது, இசையும், உலகமும் பழையபடி இருக்காது.. நன்றி கூற எனக்கு வார்த்தைகள் போதாது’ - பாடகி சித்ரா

பாடகி சித்ரா

பாடகி சித்ரா

அவர் வழிநடத்தியதற்கு நன்றி எனக்கு வார்த்தைகள் போதாது. சாவித்திரியம்மாவுக்கும், சரணுக்கும், பல்லவிக்கும், குடும்பத்தினருக்கும் என ஆழ்ந்த இரங்கல்கள்" என்று பதிவிட்டுள்ளார் பாடகி சித்ரா.

    பல கோடிக்கணக்கான மக்களின் அன்புக்கும், மரியாதைக்கும் உரிய பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம், கடந்த மாதம் முதல் மருத்துவமனை சிகிச்சையில் இருந்த அவர் இன்று பிற்பகல் 1.04 மணியளவில் காலமானார். அவர் மறைவுக்கு ரசிகர்கள், அரசியல் தலைவர்கள், திரைக் கலைஞர்கள் என பல தரப்பட்டவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பாடகி சித்ரா, பாடகர் எஸ்.பி.பி  குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களுக்கு தெரிவித்திருக்கும் இரங்கல் செய்தியில், "ஒரு சகாப்தம் முடிந்தது. இனிமேல் இசையும், உலகமும் பழையபடி இருக்காது. என்னை நல்ல பாடகியாக மாற்றுவதற்கு அவர் வழிநடத்தியதற்கு நன்றி எனக்கு வார்த்தைகள் போதாது. சாவித்திரியம்மாவுக்கும், சரணுக்கும், பல்லவிக்கும், குடும்பத்தினருக்கும் என ஆழ்ந்த இரங்கல்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

    கொரோனா தொற்று காரணமாக கடந்த மாதம் 5-ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில், பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அனுமதிக்கப்பட்டார்.  அதனைத்தொடர்ந்து 14-ம் தேதி அவரது உடல்நிலை மோசமடைந்ததால் தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டு வெண்டிலேட்டர், எக்மோ கருவிகளுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. செப்டம்பர் மாதத்தின் முதல்வாரத்திலிருந்தே எஸ்.பி.பி.யின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வந்ததாக அவரது மகன் எஸ்.பி.பி.சரண் மற்றும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டுவந்தநிலையில், நேற்றுமுதல் அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. நேற்று, மருத்துவமனை வெளியிட்ட அறிவிப்பில் அவரது உடல்நிலையில் மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என்று தெரிவித்திருந்தது. இந்தநிலையில், இன்று மதியம் 1.04 நிமிடங்களுக்கு உயிர் பிரிந்தது. அவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.
    Published by:Gunavathy
    First published:

    Tags: S.P.Balasubramaniyam

    அடுத்த செய்தி