Home /News /entertainment /

சமந்தாவுடனான அழகான பயணத்தை முடித்துக் கொள்ளும் சின்மயி?

சமந்தாவுடனான அழகான பயணத்தை முடித்துக் கொள்ளும் சின்மயி?

சின்மயி - சமந்தா

சின்மயி - சமந்தா

ஏ மாயா சேசாவே படத்திலிருந்து சமந்தாவுக்கு அவர் டப்பிங் பேசுகிறார் சின்மயி.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    சமந்தாவுடனான தனது டப்பிங் பயணம் முடிவுக்கு வருவதாக பாடகியும், டப்பிங் கலைஞருமான சின்மயி தெரிவித்துள்ளதாக தெலுங்கு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. 

    பிரபல பின்னணி பாடகி-டப்பிங் கலைஞர் சின்மயி தென்னிந்தியாவில் பிரபலமானவர். இவர் நடிகை சமந்தா ரூத் பிரபுவின் நெருங்கிய தோழிகளில் ஒருவர் என்பது அனைவரும் அறிந்ததே. சமந்தாவை சமூக ஊடகங்களில் நெட்டிசன் ஒருவர் 'செகண்ட் ஹேண்ட் ஐட்டம்' என்று அழைத்தபோது, சமந்தாவுக்கு ஆதரவாக தனது கண்டத்தை பதிவு செய்தார் சின்மயி. சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சின்மயி, சமந்தாவுடனான தனது பயணம் முடிவுக்கு வரப் போவதாக தெரிவித்ததாக தெலுங்கு மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    தானும் சமந்தாவும் நல்ல தோழிகள் என்றும், அவர்கள் ஒன்றாக இருப்பதை அனைவரும் அறிய வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார் சின்மயி. ஏ மாயா சேசாவே படத்திலிருந்து சமந்தாவுக்கு அவர் டப்பிங் பேசுகிறார். இப்படத்தின் மூலம் சமந்தாவின் நடிப்புக்கு மட்டுமல்லாமல், சின்மயின் குரலுக்கும் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    கடவுள் எனக்காக டன்சோவில் அனுப்பிய பரிசு நீ... மனைவி மகாலட்சுமியை புகழ்ந்த ரவீந்தர்!

    சமந்தாவால் தெலுங்கில் சின்மயிற்கு நல்ல அங்கீகாரம் கிடைத்தது. தற்போது அவர், “டோலிவுட்டில் டப்பிங் கலைஞராக எனது பயணம் முடிவடையும் என்று நினைக்கிறேன். ஏனெனில் தற்போது சமந்தா ரூத் பிரபு தனது கதாபாத்திரங்களுக்கு டப்பிங் பேசி வருகிறார். என்னுடைய சிறந்த தோழியான சமந்தாவுக்கு டப்பிங் பேச எனக்கு இனி வாய்ப்பு கிடைக்காது” என்று தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
    Published by:Shalini C
    First published:

    Tags: Chinmayi, Samantha

    அடுத்த செய்தி