மகளிர் தினத்தை முன்னிட்டு பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். அந்த வகையில் பாடலாசிரியர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் மகளிர் தின கவிதை ஒன்றை பகிர்ந்திருக்கிறார்.
அவரது பதிவில்,
மாலையும் நகையும்
கேட்கவில்லை பெண்;
மதித்தல் கேட்கிறாள்
வீடும் வாசலும்
விரும்பவில்லை பெண்;
கல்வி கேட்கிறாள்
ஆடம்பரம் அங்கீகாரம்
ஆசைப்படவில்லை பெண்;
நம்பிக்கை கேட்கிறாள்
கொடுத்துப் பாருங்கள்;
அவளே பாதுகாப்பாள்
ஆண்களையும்
உலக
மகளிர் திருநாள் வாழ்த்து
என்று பதிவிட்டுள்ளார்.
அவ்வீட்டு வாசலை தாண்டும்பொழுது
காம வெறியர்களை கேட்க்கவில்லை பெண்;
பாதுகாப்பு கேட்க்கிறாள்.
பாலியல் குற்றவாளிகளை அடையாளம் காட்டும்பொழுது அவதூரு கேட்க்கவில்லை பெண்;
நியாயம் கேட்கிறாள்.
I can’t get over how he speaks about women’s lib and safety. The gall. https://t.co/E1671ftmn7
— Chinmayi Sripaada (@Chinmayi) March 8, 2023
அவருக்கு பதிலளித்துள்ள சின்மயி, அவ்வீட்டு வாசலை தாண்டும்பொழுது காம வெறியர்களை கேட்கவில்லை பெண். பாதுகாப்பு கேட்கிறாள். பாலியல் குற்றவாளிகளை அடையாளம் காட்டும்பொழுது அவதூறு கேட்கவில்லை பெண்: நியாயம் கேட்கிறாள்.
இவர் எப்படி பெண்களின் பாதுகாப்பு குறித்து பேசுகிறார் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என கவிதை நடையிலேயே அவருக்கு ட்விட்டரில் பதில் கொடுத்திருக்கிறார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chinmayi sripaada, Vairamuthu