சின்மயி பிரபல பின்னணி பாடகர் ஆவார். கன்னத்தில் முத்தமிட்டால் பாடல் மூலம் பாடகியாக அறிமுகமான சின்மயி பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார். குரு படத்தில் இவர் பாடிய ‘மையா மையா’ பாடல் மிகுந்த வரவேற்புகள பெற்றது. சின்மயி பாடகி மட்டுமில்லாமல் வாய்ஸ் ஆர்டிஸ்டாகவும் பல ஹீரோயின்களுக்கு பின்னணி குரல் கொடுத்துள்ளார்.
சின்மயி சமூகத்தின் மீதுள்ள தனது கருத்துகளை வெளிப்படையாக பேசக்கூடியவர்.பல சர்ச்சை விமர்சனங்களை அடிக்கடி பெறுவார். எதையும் கண்டுக்கொள்ளாத சின்மயி தனக்கு தோன்றும் கருத்துக்களை ட்விட்டர் மூலம் பகிர்ந்துக்கொள்வார்.
இந்நிலையில் சின்மயி தனது சமூக வலைதளங்களில் தனக்கு இரட்டை குழந்தை பிறந்திருப்பதாக அறிவித்துள்ளார். இதற்கு பிரபலங்கள் பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இரட்டை குழந்தையில் ஒரு ஆண், ஒரு பெண் பிறந்துள்ளதாகவும் சின்மயி பதிவிட்டுள்ளார். அவர்களுக்கு த்ரிப்தா மற்றும் ஷர்வாஸ் என்று பெயர் வைத்துள்ளார்.மேலும் ஆப்ரேஷன் செய்யும் போது ‘பஜன்’ பாடி குழந்தைகளை வரவேற்றதாகவும் பதிவிட்டுள்ளார்.
அதுமட்டுமில்லாமல் குழந்தையின் கைகளை பிடித்தவாறு இருக்கும் புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
Published by:Tamilmalar Natarajan
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.