முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / இரட்டை குழந்தைக்கு தாயான பாடகி சின்மயி.. குவியும் வாழ்த்துக்கள்

இரட்டை குழந்தைக்கு தாயான பாடகி சின்மயி.. குவியும் வாழ்த்துக்கள்

பாடகி சின்மயி

பாடகி சின்மயி

Singer Chinmayi : பாடகி சின்மயிக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதையடுத்து பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

  • Last Updated :

சின்மயி பிரபல பின்னணி பாடகர் ஆவார். கன்னத்தில் முத்தமிட்டால் பாடல் மூலம் பாடகியாக அறிமுகமான சின்மயி பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார். குரு படத்தில் இவர் பாடிய ‘மையா மையா’ பாடல் மிகுந்த வரவேற்புகள பெற்றது. சின்மயி பாடகி மட்டுமில்லாமல் வாய்ஸ் ஆர்டிஸ்டாகவும் பல ஹீரோயின்களுக்கு பின்னணி குரல் கொடுத்துள்ளார்.

சின்மயி சமூகத்தின் மீதுள்ள தனது கருத்துகளை வெளிப்படையாக பேசக்கூடியவர்.பல சர்ச்சை விமர்சனங்களை அடிக்கடி பெறுவார். எதையும் கண்டுக்கொள்ளாத சின்மயி தனக்கு தோன்றும் கருத்துக்களை ட்விட்டர் மூலம் பகிர்ந்துக்கொள்வார்.

இந்நிலையில் சின்மயி தனது சமூக வலைதளங்களில் தனக்கு இரட்டை குழந்தை பிறந்திருப்பதாக அறிவித்துள்ளார். இதற்கு பிரபலங்கள் பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இரட்டை குழந்தையில் ஒரு ஆண், ஒரு பெண் பிறந்துள்ளதாகவும் சின்மயி பதிவிட்டுள்ளார். அவர்களுக்கு த்ரிப்தா மற்றும் ஷர்வாஸ் என்று பெயர் வைத்துள்ளார்.மேலும் ஆப்ரேஷன் செய்யும் போது ‘பஜன்’ பாடி குழந்தைகளை வரவேற்றதாகவும் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க : வாடகை தாய் மூலம் குழந்தை பெற்று கொண்டீர்களா? நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்த சின்மயி

top videos

    அதுமட்டுமில்லாமல் குழந்தையின் கைகளை பிடித்தவாறு இருக்கும் புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

    First published:

    Tags: Singer Chinmayi, Singer Chinmayi Twitter page