ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

இரட்டை குழந்தைகளுக்கு பாலூட்டும் படத்தைப் பகிர்ந்த சின்மயி!

இரட்டை குழந்தைகளுக்கு பாலூட்டும் படத்தைப் பகிர்ந்த சின்மயி!

சின்மயி

சின்மயி

சின்மயி தனது நான்கு மாத மகன் மற்றும் மகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தனது இரட்டை குழந்தைகளுக்கு பாலூட்டும் படத்தினை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார் பாடகி சின்மயி.

  பிரபல பாடகியும், டப்பிங் கலைஞருமான சின்மயி, நடிகரும் இயக்குனருமான ராகுல் ரவீந்திரனை 2014-ல் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இந்த ஆண்டு ஜூன் 21-ஆம் தேதி இரட்டை குழந்தை பிறந்தது. தனக்கு ட்ரிப்டா மற்றும் ஷ்ரவாஸ் என்ற இரட்டை குழந்தைகள் பிறந்ததை இன்ஸ்டகிராமில் அறிவித்திருந்தார் சின்மயி.

  இதையடுத்து வாடகைத் தாய் முறையில் சின்மயி குழந்தை பெற்றதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவின. அதற்கு, "நான் எனது தனிப்பட்ட வாழ்க்கை, எனது குடும்பம், எனது நண்பர்கள் வட்டம் ஆகியவற்றில் மிகவும் கவனமாக இருந்தேன். எங்கள் குழந்தைகளின் புகைப்படங்கள் நீண்ட காலத்திற்கு சமூக வலைதளங்களில் இருக்காது. எனது இரட்டையர்கள் பிறக்கும் போது சிசேரியன் சமயத்தில் நான் பஜனை பாடலை பாடினேன்” என்று தெரிவித்திருந்தார் சின்மயி.

  சினிமாவுக்கு குட் பை சொல்லும் அஜித்?
   
  View this post on Instagram

   

  A post shared by Chinmayi Sripada (@chinmayisripaada)  இந்நிலையில், சின்மயி தனது நான்கு மாத மகன் மற்றும் மகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். "உலகின் மிகச்சிறந்த விஷயம்” என்று அதற்கு தலைப்பிட்டிருந்தார். அந்தப் படத்துக்கு ரசிகர்கள் பலர் தங்களது விருப்பத்தை தெரிவித்தனர்.

  Published by:Shalini C
  First published:

  Tags: Chinmayi