மத்தவங்க டிமாண்டுக்காக குழந்தை பெத்துக்காதீங்க. 30 வயதில் கூட ஆரோக்யமான குழந்தையை பெற்று கொள்ளலாம் என சின்மயி கூறியுளார்.
பிரபல பின்னணி பாடகி சின்மயி மற்றும் நடிகர் ராகுல் ரவிந்திரன் தம்பதியினருக்கு சமீபத்தில் இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளன. குழந்தைகளின் பிஞ்சு விரல்களை காட்டியபடி எடுத்த புகைப்படங்களை ஷேர் செய்த சின்மயி குழந்தைகளின் பெயர்களையும் வெளியிட்டிருந்தார்.
இதற்கு பிரபலங்கள் பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இரட்டை குழந்தையில் ஒரு ஆண், ஒரு பெண் பிறந்துள்ளதாகவும் சின்மயி பதிவிட்டுள்ளார். அவர்களுக்கு த்ரிப்தா மற்றும் ஷர்வாஸ் என்று பெயர் வைத்துள்ளதாக்வும் அந்த பதிவில் தெரிவித்திருந்தார்.
மேலும், தனக்கு ட்வின்ஸ் பிறந்துள்ளதாக அறிவித்துள்ள சின்மயிடம் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டீர்களா என்று மெசேஜில் கேட்பவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சின்மயி போஸ்ட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் "நான் கர்ப்பமாக இருப்பதைப் போன்ற படங்களை வெளியிடாததால், வாடகைத் தாய் மூலம் எனக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்ததா என்று என்னிடம் கேட்கும் இந்த நபர்களை நான் முற்றிலும் நேசிக்கிறேன் என்றும் தெரிவித்திருந்தார்.
Of course you CAN have healthy babies in your 30s.
அதனைத் தொடர்ந்து சின்மயி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் 30 வயதுக்கு மேல் ஆனாலும், ஆரோக்கியமான குழந்தையை பெற்றுக் கொள்ளலாம். மேலும், அடுத்தவங்க டிமாண்டுக்காக குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டாம். உங்களுக்கு எப்போது குழந்தை பெற்றுக்கொள்ள தோன்றுகிறதோ அப்போது பெற்றுக் கொள்ளுங்கள் என்றும் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.
Follow @ Google News:கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.