எனக்கும் வடிவேலுவுக்கும் 30 வருட நட்பு... மன்னிப்பு கோரிய மனோபாலா

தன் மீது நடிகர் சங்கத்தில் வடிவேலு புகாரளித்திருந்த நிலையில் மனோபாலா மன்னிப்பு கோரியுள்ளார்.

எனக்கும் வடிவேலுவுக்கும் 30 வருட நட்பு... மன்னிப்பு கோரிய மனோபாலா
வடிவேலு | மனோபாலா
  • Share this:
தமிழ் சினிமாவில் ரசிர்களால் மறக்க முடியாத ஒரு காமெடி கூட்டணி வடிவேலு-சிங்கமுத்து கூட்டணி. இந்த கூட்டணியில் உருவான பல காமெடி காட்சிகள் இன்றும் ரசிகர்கள் திரும்பத் திரும்ப பார்க்கும் காட்சியாக அமைந்துள்ளது. இருவரது கூட்டணியும் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில், வடிவேலு மற்றும் நடிகர் சிங்கமுத்து இடையே நிலத்தகராறு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர். நீதிமன்றம் வரை இந்த பிரச்னை சென்றது. இதை தொடர்ந்து இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி, பேசி வந்தனர்

இந்நிலையில் நடிகர் மனோபாலா நடத்தி வரும் ஒரு யூடியூப் சேனலில், சிங்கமுத்துவை பேட்டி எடுத்தார். அந்த பேட்டி தற்போது இருவருக்கும் இடையிலான பிரச்னையை மீண்டும் தூசி தட்டி எழுப்பியுள்ளது. மனோபாலா உடனான பேட்டியில் வடிவேலுவின் சம்பளத்தை தாங்கள்தான் உயர்த்திவிட்டதாக சிங்கமுத்து கூறியுள்ளார். வடிவேலுவுக்கு 200 கோடி ரூபாய் சொத்து சேர்த்து கொடுத்ததாகவும், ஆனால் அவர் தன்மீது 7 கோடியை கையாடல் செய்ததாக வழக்கு போட்டுள்ளதாகவும் சிங்கமுத்து புகார் கூறினார்.

உண்மை தெரியாமல் தனக்கு எதிராக வடிவேலு வழக்கு நடத்துவதாகவும், வழக்கு முடியும் வரை இருவரும் இருப்போமா என தெரியவில்லை என சிங்கமுத்து கூறியுள்ளார். இந்த பேட்டி தொடர்பாக கடந்த மாதம் 19-ம் தேதி வடிவேலு, நடிகர் சங்கத்திற்கு புகார் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.


அதில், நடிகர் மனோபாலா நடத்தும் யூடியூப் சேனலில் தன்னைப் பற்றி சில கேள்விகளை சிங்கமுத்துவிடம் கேட்க, அதற்கு அவர் என்னைப் பற்றி தரக்குறைவாகவும் தவறான செய்திகளையும் பொய்ப் பிரச்சாரங்கள் செய்தும் பதிலளித்துள்ளதாக கூறியுள்ளார்.

அந்த வீடியோவை பல பிரபல நடிகர்கள் உள்ள SIAA லைப் மெம்பர் ஷிப் என்ற வாட்ஸ் ஆப் குரூப்பிலும் பகிர்ந்துள்ளார். இதனால் தான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக வடிவேலு கூறியுள்ளார். ஏற்கெனவே நில மோசடி விவகாரம் தொடர்பாக தனக்கும் சிங்கமுத்துவுக்கும் இடையேயான வழக்கு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதையும் வடிவேலு சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆகையால் மனோபாலா மற்றும் சிங்கமுத்து இருவர் மீதும் நடிகர் சங்க சட்ட விதி எண் 13-ன் படி தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி வடிவேலு அந்த கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.இந்நிலையில் வடிவேலுவுக்கும் தனக்கும் 30 வருட நட்பு இருப்பதாக தெரிவித்திருக்கும் மனோபாலா, வடிவேலுவிடம் மனம் திறந்து மன்னிப்பும் கோரியுள்ளார்.

மேலும் படிக்க: உலகத் தமிழர்கள் வாழ்த்துச் சொல்ல வேண்டும் - மணிரத்னம் பிறந்தநாளுக்காக பாரதிராஜா வெளியிட்ட வீடியோ
First published: June 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading