சிங்கம்பட்டி சீமராஜாவாக நடித்ததற்கு எப்போதும் பெருமை கொள்வேன் - நடிகர் சிவகார்த்திகேயன்

சிங்கம்பட்டி சீமராஜாவாக நடித்ததற்கு எப்போதும் பெருமை கொள்வேன் என நடிகர் சிவகார்த்திகேயன் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சிங்கம்பட்டி சீமராஜாவாக நடித்ததற்கு எப்போதும் பெருமை கொள்வேன் - நடிகர் சிவகார்த்திகேயன்
சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி
  • Share this:
ஆயிரம் ஆண்டு பாரம்பரியம் கொண்ட சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி அவரது வீட்டில் காலமானார். அவரது வாழ்க்கைக் கதை திரைப்படமாக தயாரிக்கப்பட்டிருந்தது.

தென் இந்தியாவில் எஞ்சியிருக்கும் பட்டம் கட்டிய ஒரே ராஜாவாகக் கருதப்பட்டவர் சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி. இவருடைய வாழ்க்கை கதையை அடிப்படையாக கொண்டுதான் சிவகார்த்திகேயன், சமந்தா நடிப்பில் சீமராஜா திரைப்படம் அண்மையில் வெளியாகி இருந்தது.

ALSO READ :  நுனி நாக்கு ஆங்கிலம்... எல்.ஐ.சி முகவர்... அதீத ஆன்மீக ஈடுபாடு...! தென்னிந்தியாவின் கடைசி ஜமீன் தீர்த்தபதி காலமானார்


இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார். அதில் சிங்கம்பட்டி சீமராஜாவாக நடித்ததற்கு எப்போதும் பெருமை கொள்வேன் அய்யா. அய்யாவின் பிரிவால் வாடும் குடும்பத்தாருக்கும்,சிங்கம்பட்டி மக்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள் #RIPsingampattiRaja என குறிப்பிட்டுள்ளார்.முன்னதாக சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
First published: May 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading