Simran: சிவகார்த்திகேயனை தொடர்ந்து முன்னணி நடிகருக்கு வில்லியாகும் சிம்ரன்?

சிம்ரன்

சிம்ரன் இதற்கு முன் சிவகார்த்திகேயனின் சீமராஜா படத்தில் வில்லியாக நடித்தார்.

  • Share this:
    சர்தார் படத்தில் கார்த்திக்கு வில்லியாக சிம்ரன் நடிப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

    கார்த்தி தற்போது மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன், பி.எஸ்.மித்ரனின் சர்தார் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சர்தாரில் கார்த்திக்கு இரண்டு வேடங்கள். ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன் என இரு நாயகிகள். பி.எஸ்.மித்ரனின் முந்தையப் படங்களைப் போல க்ரைம், ஆக்ஷன் கலந்து சர்தார் தயாராகிறது. இதில் இரண்டு கெட்டப்புகளில் ஒன்றில் வயதான தோற்றத்தில் கார்த்தி வருகிறார்.

    சர்தார் படத்தில் வில்லியாக சிம்ரன் நடிப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. சிம்ரன் இதற்கு முன் சிவகார்த்திகேயனின் சீமராஜா படத்தில் வில்லியாக நடித்தார். சேலையை தூக்கி இடுப்பில் செருகி, சைதாப்பேட்டை தமிழ்செல்வி ரேஞ்சுக்கு சத்தம் போட்ட அவரது வில்லித்தனம் எடுபடவில்லை. சர்தாரில் என்னவாகப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    பேட்ட படத்தில் ரஜினியுடன் நடித்த பிறகு சிம்ரனுக்கு பல வாய்ப்புகள் அமைந்தன. பிஸியாக நடித்து வருகிறார். இந்தி அந்தாதுன் படத்தின் தமிழ் ரீமேக்கான அந்தகனில் சிம்ரன் தற்போது நடித்து வருகிறார். இந்தியில் தபு நடித்த வேடத்தை தமிழில் சிம்ரன் செய்வதாக கூறப்படுகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: