வயசானாலும் அப்படியே இருக்கீங்களே... இணையத்தில் வைரலாகும் சிம்ரனின் நடனம்..!

நீங்கள்தான் பெண் நடன சூப்பர் ஸ்டார் அன்பு மழையை கமெண்டுகளில் பொழியும் ரசிகர்கள்.

வயசானாலும் அப்படியே இருக்கீங்களே... இணையத்தில் வைரலாகும் சிம்ரனின் நடனம்..!
சிம்ரன் டான்ஸ்
  • Share this:
90-களில் பிறந்தவர்களில் பலருக்கும் இவர்தான் கனவுக் கன்னி. ஆல் டைம் ஃபேவரட் நாயகியாக வலம் வரும் சிம்ரன் இன்று ஒரு வீடியோ போட்டாலும் மாஸ் குறையாமல் வைரலாகிறது என்றால் அது ஆச்சரியம்தான்.

நடிப்பில் மட்டுமல்லாது நடன நாயகியாக பலரது இதயங்களைக் கட்டிப்போட்ட சிம்ரனின் நடனத்தை மீண்டும் திரையில் காண முடியவில்லையே என ஏங்கும் தன் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது இந்த நடனம். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிம்ரன் நடனப் பள்ளியில் பயிற்சி எடுப்பது போன்ற வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

அதன் கேப்ஷனாக “ நடனம் உங்கள் கவலைகளை போக்கச் செய்யும்.  நடனத்தோடு ஒன்றி ஆடும்போது அதன் இசையில் மூழ்கி உடல் தானாக வலைந்து கொடுக்கும்” என்று எழுதியுள்ளார்.


அதைப் பார்த்த நெட்டிசன்கள் நீங்கள்தான் பெண் நடன சூப்பர் ஸ்டார், என்றும் இளமையாக அப்படியே இருக்கிறீர்களே என தங்களுடைய அன்பு மழையைக் கமெண்ட்டுகளில் பொழிந்து வருகின்றனர்.
மேலும் பலர் நீங்கள் மீண்டும் கெஸ்ட் அப்பியரன்ஸாகவாவது படங்களில் நடனம் ஆட வேண்டும் என்று கோரிக்கையும் வைக்கின்றனர். சிம்ரன் இப்படி சிறப்பு கதாபாத்திரங்களில் யூத், பிதாமகன் போன்ற படங்களில் நடனமாடி அந்த வீடியோக்கள் பட்டிதொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பியது குறிப்பிடத்தக்கது.

 

 
First published: February 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading