சிம்பு நடித்துள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியுடன் இன்று மாலை நடைபெறுகிறது.
கௌதம் வாசுதேவமேனன் இயக்கத்தில் சிம்பு நடித்திருக்கும் திரைப்படம் வெந்து தணிந்தது காடு. இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும் இந்த மாதம் 15-ம் தேதி இந்த திரைப்படத்தை வெளியிட உள்ளனர். இந்த நிலையில் ஏ.ஆர். ரகுமான் இசையில் உருவாகியிருக்கும் பாடல்களை இன்று வெளியிட உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் முன்னதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.
அதற்கான நிகழ்ச்சி பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் எனவும் தெரிவித்திருந்தனர். அந்த பாடல் வெளியீட்டு விழா ஏ.ஆர். ரகுமான் இசை நிகழ்ச்சி உடன் நடைபெற உள்ளது எனவும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் அறிவித்திருந்தார்.
Also read... பச்சை நிற புடவையில் ஜொலிக்கும் நடிகை கத்ரீனா கைஃப்!
கௌதம் வாசுதேவ் மேனன் - சிம்பு கூட்டணியில் ஏற்கனவே வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா மற்றும் அச்சம் என்பது மடமையடா ஆகிய திரைப்படங்கள் வெற்றியடைந்துள்ளன. இதனால் அவர்கள் கூட்டணியில் மீண்டும் உருவாகி இருக்கும் வெந்து தணிந்தது காடு படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில், வெந்து தணிந்தது காடு படத்தின் பாடல் வெளியீட்டு விழா பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. சிறப்பு விருந்தினர்களாக நடிகர்கள் கமல்ஹாசன், உதயநிதி ஸ்டாலின் கலந்துகொள்கிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நடிகர் கமல்ஹாசன் மற்றும் சிம்பு ஆகியோர் ஹெலிகாப்டரில் வருகின்றனர் என்றும் தகவல்கள் தெரிவித்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Simbhu, Gautham Vasudev Menon, Kamal Haasan, Udhayanidhi Stalin