• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • கௌதம் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் வெந்து தணிந்தது காடு...!

கௌதம் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் வெந்து தணிந்தது காடு...!

சிம்பு - கெளதம் மேனன்

சிம்பு - கெளதம் மேனன்

இந்த புது லுக்கை எதிர்பார்க்காத சிம்பு ரசிகர்கள் பரவசத்தில் உள்ளனர். ரஹ்மான் இதற்கு இசையமைக்கிறார் வேல்ஸ் இன்டர்நேஷனல்ஸ் ஐசரி கணேஷ் தயாரிப்பு.

  • News18
  • Last Updated :
  • Share this:
கௌதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்துக்கு வைக்கப்பட்டிருந்த நதிகளிலே நீராடும் சூரியன் பெயரை மாற்றி, புதுப்பெயரை இன்று அறிவித்துள்ளனர். படத்துக்கு வெந்து தணிந்தது காடு என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

கௌதம் இயக்கத்தில் இதுவரை வெளிவந்த படங்கள் அனைத்தும் கொஞ்சம் எலைட் தன்மையுடன் சென்டர் ரசிகர்களுக்கு ஏற்றபடி இருக்கும். நடிகர், நடிகைகள் எக்ஸ்ட்ரா அழகுடன் துலங்குவார்கள். நதிகளிலே நீராடும் சூரியன் என்ற பெயர், இந்தப் படமும் அப்படியே இருக்கும் என எண்ண வைத்தது. அதனை உடைத்து சுக்குநூறாக்கியிருக்கிறது படத்தின் பர்ஸ்ட் லுக்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சிம்பு இதில் அழுக்கு லுங்கி, கிழிந்த சட்டை, காலில் ரப்பர் செருப்பு, கையில் ஒரு தடி என அழுக்கில் புரண்ட அகோரியாக காட்சியிள்கிகறார். இந்த புது லுக்கை எதிர்பார்க்காத சிம்பு ரசிகர்கள் பரவசத்தில் உள்ளனர். ரஹ்மான் இதற்கு இசையமைக்கிறார் வேல்ஸ் இன்டர்நேஷனல்ஸ் ஐசரி கணேஷ் தயாரிப்பு.



Also read... ஐஸ்வர்யா ராஜேஷ் கலந்து கொண்ட திட்டம் இரண்டு சக்சஸ் மீட்...!

பொதுவாக எந்த எழுத்தாளருடனும் சேர்ந்து பணிபுரிவதில்லை கௌதம். அரைகுறையாக எழுதி ஸ்கிரிப்டுடன் சென்று, தன் போக்கில் கதையை நகர்த்தி படப்பிடிப்பை முடிப்பார். அப்படி எடுத்த படங்கள் பாக்ஸ் ஆபிஸில் மொட்டையைப்போட, இந்தப் படத்தில் முதல்முறையாக எழுத்தாளர் ஜெயமோகனை இணைத்துக் கொண்டுள்ளார்

வெந்து தணிந்தது காடு என்பதே ஒரு பவர்ஃபுல் டைட்டில். படமும் அதுபோல் இருந்தால், கௌதம் - சிம்பு கூட்டணி பல சாதனைகளை படைக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: