நடுக்கடலில் ஹன்சிகாவுடன் சிம்பு - வைரலாகும் புகைப்படம்

news18
Updated: May 27, 2019, 11:55 AM IST
நடுக்கடலில் ஹன்சிகாவுடன் சிம்பு - வைரலாகும் புகைப்படம்
ஹன்சிகா
news18
Updated: May 27, 2019, 11:55 AM IST
‘மஹா'  படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

நடிகை ஹன்சிகாவின் 50-வது படமாக உருவாகி வருகிறது மஹா. இந்தப் படத்தை ‘ரோமியோ ஜூலியட்’ மற்றும் ‘போகன்’ ஆகிய படங்களை இயக்கிய லக்‌ஷ்மணிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ஜமீல் இயக்குகிறார்.

ஹீரோயினை மையப்படுத்திய இந்தக் கதையில், ஸ்ரீகாந்த், தம்பி ராமையா, நாசர், கருணாகரன், ஜெயப்பிரகாஷ், சாயா சிங் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மதியழகன் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.
இந்தப் படத்தில் நடிக்க நடிகர் சிம்பு 7 நாட்கள் கால்ஷீட் ஒதுக்கியுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், சமீபத்தில் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார் சிம்பு. படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளன. அந்த புகைப்படத்தில் நடிகை ஹன்சிகாவும் இடம்பெற்றுள்ளார்.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், காவி உடை அணிந்து ஹன்சிகா புகை பிடிப்பது போன்ற புகைப்படம் இடம்பெற்றிருந்ததால் எதிர்ப்பு கிளம்பியதும் குறிப்பிடத்தக்கது.

Loading...

வீடியோ பார்க்க: ஜில் ஜில் ரமாமணி மனோரமா திரைப்பயணம்!

First published: May 27, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...