சிம்புவின் மாநாடு கைவிடப்பட்டது - வருத்தத்துடன் அறிக்கைவிட்ட தயாரிப்பாளர்

news18
Updated: August 8, 2019, 11:58 AM IST
சிம்புவின் மாநாடு கைவிடப்பட்டது - வருத்தத்துடன் அறிக்கைவிட்ட தயாரிப்பாளர்
வெங்கட் பிரபு , சிம்பு , தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி
news18
Updated: August 8, 2019, 11:58 AM IST
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்க இருந்த மாநாடு படத்தைக் கைவிடுவதாக படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி விடுத்திருக்கும் அறிக்கையில், மிக வருத்தத்திற்குரிய ஒரு முடிவை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். அன்புத்தம்பி சிம்பு ஒரு பெரிய பொறுப்பைக் கொடுத்தார்.

தன்னை வைத்து மாநாடு படத்தை எடுக்க என்னை தூண்டி, துணை நின்ற நண்பன் சிம்புவுக்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.


ஆனால் காலமும் நேரமும் கடந்துகொண்டே போவது நாளை கசப்பாக மாறிவிடக்கூடாது. எதையும் உரிய நேரத்தில் திட்டமிட்டபடி செய்கிறவன் அந்த தயாரிப்புக்கு நேர்மையோடு இருக்கிறேன் என்று நம்புகிறவன் நான். ஆனால் எவ்வளவோ இழுத்துப் பிடித்தும் கால விரயம் தான் நிகழ்ந்ததே தவிர படம் தொடங்க இயலவில்லை.

அதனால் சிம்பு நடிக்க இருந்த மாநாடு படத்தினை கைவிடுவதை தவிர்க்க இயலவில்லை.

சிம்புவின் அன்பும் நட்பும் தொடரும். இதுவரை என்மீது அன்பு செலுத்துய அவரின் ரசிகர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.

Loading...

வெங்கட் பிரபு இயக்க மாநாடு படம் எனது தயாரிப்பில் புதிய பரிமாணத்தோடு தொடங்கும். விரைவில் அந்த அறிவிப்பு வரும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
First published: August 8, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...