சிம்புவின் மாநாடு திடீர் நிறுத்தம்... பிளானை மாற்றிய வெங்கட் பிரபு...!

மே மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்பட்டிருந்த நிலையில் வெளிநாட்டிலும், ஊட்டியிலும் சில காட்சிகள் படமாக்கப்பட்டதாக தகவல்கள் உள்ளன

news18
Updated: July 20, 2019, 3:16 PM IST
சிம்புவின் மாநாடு திடீர் நிறுத்தம்... பிளானை மாற்றிய வெங்கட் பிரபு...!
பிரேம்ஜி, சிம்புவுடன் வெங்கட் பிரபு
news18
Updated: July 20, 2019, 3:16 PM IST
சிம்புவின் மாநாடு படம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் வெப் சீரிஸ் ஒன்றை இயக்கத் திட்டமிட்டுள்ளார் வெங்கட் பிரபு.

பார்ட்டி படத்தை அடுத்து சிம்புவுடன் மாநாடு படத்துக்காக கைகோர்த்தார் வெங்கட் பிரபு. அரசியலை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருந்த மாநாடு படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க கல்யாணி பிரியதர்ஷன் ஒப்பந்தமானார். இந்தப் படத்துக்காக இங்கிலாந்து சென்ற சிம்பு தனது உடல் எடையைக் குறைத்து நாடு திரும்பினார்.

மே மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்பட்டிருந்த நிலையில் வெளிநாட்டிலும், ஊட்டியிலும் சில காட்சிகள் படமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி படத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதனிடையே நடிகர் சிம்பு கன்னடத்தில் வெளியாகி ஹிட் அடித்த மஃப்தி பட தமிழ் ரீமேக்கில் நடிப்பதற்காக சென்று விட்டாராம்.


இதனால் பொறுமையாகக் காத்திருந்த வெங்கட் பிரபு மாநாடு படம் தள்ளிப்போகும் என்று தெரிந்ததால், அதற்கு முன்னதாக ஹாட் ஸ்டார் தளத்துக்காக வெப் சீரிஸ் ஒன்றை இயக்க திட்டமிட்டுள்ளார். இந்த வெப் சீரிஸ் எப்போது துவங்கும், அதில் நடிக்கும் நடிகர், நடிகைகள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வீடியோ பார்க்க: கனவு நாயகன் விஜய் தேவரகொண்டா நேர்காணல்

First published: July 20, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...