வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்திருக்கும் மாநாடு படத்தை ஆந்திரா, தெலுங்கானா, கேரளாவிலும் பிரமாண்டமாக வெளியிடுகின்றனர்.
சிம்புவின் மாநாடு திரைப்படம் சமீபத்திய அவரது எந்த திரைப்படத்தையும்விட அதிக கவனத்தை பெற்றுள்ளது. வெங்கட்பிரபு படத்தை இயக்கியிருப்பது பிரதான காரணம். இரண்டாவது படத்தின் திரைக்கதை. டைம் லூப் யுக்தியில் இதன் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. மூன்றாவது எஸ்.ஜே.சூர்யா.
படத்தின் ட்ரெய்லரில் இன்ஸ்பெக்டராக வரும் இவர், 'வந்தான் சுட்டான் போனான் ரிப்பீட்டு' என்று சொன்ன டயலாக் ரசிகர்களிடையே ஹிட்டானது. இந்த வசனத்தை வைத்தே மாநாடு படத்தை அடையாளப்படுத்துகிறார்கள். இதனை உணர்ந்து கொண்ட படக்குழுவும் இந்த வசனத்தை முக்கியத்துவப்படுத்தி பட விளம்பரங்களை செய்து வருகிறது.
மாநாடு திரைப்படம் தெலுங்கில் 'தி லூப்' என்ற பெயரில் தமிழில் வெளியாகும் அதே நவம்பர் 25 வெளியாகிறது. இதன் புரமோஷன் நிகழ்ச்சிகளில் சிம்பு கலந்து கொண்டு வருகிறார். மிக அரிதாகவே தனது படங்களின் தெலுங்கு பதிப்பின் புரமோஷன்களில் அவர் கலந்து கொண்டிருக்கிறார். பெரும்பாலான படங்களுக்கு இதேபோன்ற புரமோஷன் நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதில்லை. இதற்கு முன் சிம்பு நடிப்பில் ஆந்திர மாநிலங்களில் அதிகம் ஓடிய படம் மன்மதன். இப்போதும் அவரை தெலுங்கு மீடியாக்கள் மன்மதடு நடிகர் என்றே குறிப்பிடுகின்றன.
Also read... கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தை தொடங்கி வைத்த அதர்வாவின் குருதி ஆட்டம்
கேரளாவிலும் வழக்கத்தைவிட அதிக திரைகளில் மாநாடு வெளியாகிறது. அதற்கான விளம்பரப் பணிகள் தொடங்கியுள்ளன. சிம்பு இதுவரை நடித்தப் படங்களில் அதிக ஓபனிங், அதிக வசூலை பெறப்போகும் படமாக மாநாடு இருக்கும் என்பது அவர் சார்ந்த அனைவரது நம்பிக்கை.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Simbhu, Maanaadu, SJSurya, Venkat Prabhu