ஓவியாவுக்காக சிம்பு செய்த அர்ப்பணிப்பு - இயக்குநர் வெளியிட்ட வைரல் வீடியோ

ஓவியாவின் படத்துக்காக அர்ப்பணிப்பு உணர்வுடன் நடிகர் சிம்பு பணியாற்றி வருவதாக படத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

news18
Updated: December 12, 2018, 5:08 PM IST
ஓவியாவுக்காக சிம்பு செய்த அர்ப்பணிப்பு - இயக்குநர் வெளியிட்ட வைரல் வீடியோ
நடிகர் சிம்பு| ஓவியா
news18
Updated: December 12, 2018, 5:08 PM IST
ஓவியாவின் படத்துக்காக அர்ப்பணிப்பு உணர்வுடன் நடிகர் சிம்பு பணியாற்றி வருவதாக படத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் களவாணி, கலகலப்பு உள்ளிட்ட பல படங்களில் நடிகையாக நடித்திருந்த ஓவியா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். அவருக்கென ரசிகர் பட்டாளம் அதிகரித்து ஓவியா ஆர்மி உருவாக்கப்பட்டது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் கடந்த ஒரு வருடமாக தமிழில் அவர் நடிப்பில் எந்த படமும் வெளியாகவில்லை. அவர் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கும் சிலுக்குவார் பட்டி சிங்கம் படம் வரும் 21-ம் தேதி திரைக்கு வர உள்ளது. அதற்காக ஓவியாவின் பாடல் ஒன்றையும் படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. அந்தப் பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்தப் படத்தை அடுத்து ஓவியா நடித்திருக்கும் களவாணி 2, காஞ்சனா 3, 90 எம்.எல் ஆகிய படங்களின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஓவியா முக்கிய வேடத்தில் நடித்துள்ள 90 எம்.எல் படத்தை அனிதா உதீப் என்பவர் இயக்கியுள்ளார். படம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருக்கும் அவர், இப்படத்துக்காக நடிகர் சிம்பு அர்ப்பணிப்புடன் இசையமைத்து வருவதாக கூறியுள்ளார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

முகேஷ் அம்பானி - நிடா அம்பானி கலக்கல் நடனம் - வீடியோ

First published: December 12, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...