வெந்து தணிந்தது காடு படத்தின் செண்ட் லுக் வெளியானது...!

வெந்து தணிந்தது காடு

வெந்து தணிந்தது காடு படத்தை ஐசரி கணேஷின் வேல்ஸ் ஃபிலிம்ஸ் தயாரிக்க, ரஹ்மான் இசையமைக்கிறார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
கௌதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில், சிம்பு நடித்துவரும் வெந்து தணிந்தது காடு படத்தின் இரண்டாவது பார்வை இன்று வெளியானது. 

சிம்பு குறித்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் இந்த வருட ஆரம்பத்தில் இருந்து பனியாக உருக ஆரம்பித்தன. சுசீந்திரனின் ஈஸ்வரன் படத்தை எந்த பிரச்சனையும் செய்யாமல் முடித்துக் கொடுத்தது நல்ல ஆரம்பமாக அமைந்தது. வெங்கட்பிரபுவின் மாநாடு படத்தையும் அதே ஈடுபாட்டுடன் நடித்துக் கொடுத்தார். அதையடுத்து, கௌதம் இயக்கத்தில் நிதிகளிலே நீராடும் சூரியன் படத்தில் நடிக்க இருந்தவர், அசுரன் போல ஒரு படம் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட, சூரியனின் நீராட்டத்தை நிறுத்தி, ஜெயமோகன் எழுதிய கதையை திரைப்படமாக்க தீர்மானித்தனர். அதுதான் வெந்து தணிந்தது காடு

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக்கில் உடல் இளைத்து அழுக்கேறிய தோற்றத்திலிருந்த சிம்பு அனைவரையும் கவர்ந்தார். படம் மீது எக்ஸ்ட்ரா வெளிச்சம் பாய்ந்தது

Also read... மைக்கேல் - விஜய் சேதுபதி, சந்தீப் கிஷனின் பான் இந்தியா திரைப்படம்!

இன்று காலை வெந்து தணிந்தது காடு படத்தின் இரண்டாவது பார்வையை வெளியிட்டனர். இதில் தொழிலாளர்களுடன் காற்றுபுகாதா குறுகிய அறையில் சிம்பு இருக்கும் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. பேஷன் பரேடு போல காட்சிக்கு காட்சி காஸ்ட்லி காஸ்ட்யூமில் நடித்து வந்த சிம்பு முதல்முறையாக ஒரு படத்துக்காக ரிஸக் எடுத்திருக்கிறார். அது போஸ்டரிலேயே தெரிகிறது.

வெந்து தணிந்தது காடு படத்தை ஐசரி கணேஷின் வேல்ஸ் ஃபிலிம்ஸ் தயாரிக்க, ரஹ்மான் இசையமைக்கிறார்.
Published by:Vinothini Aandisamy
First published: