• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • அனைத்து ஏரியாக்களிலும் விற்றுத் தீர்ந்த சிம்புவின் மாநாடு!

அனைத்து ஏரியாக்களிலும் விற்றுத் தீர்ந்த சிம்புவின் மாநாடு!

சிம்பு

சிம்பு

தீபாவளிக்கு வெளியான எனிமி அப்போதே அவுட்டானது. அண்ணாத்த படத்துக்கும் கூட்டமில்லை.

  • Share this:
    சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கியிருக்கும் மாநாடு படத்தின் அனைத்து ஏரியாக்களும் விற்பனையாகியுள்ளன.

    படப்பிடிப்புக்கு டிமிக்கி கொடுப்பதற்கு விருது உண்டென்றால் வருடா வருடம் அதனை சிம்பு வாங்கியிருப்பார். படப்பிடிப்பை சொதப்புவதில் அப்படியொரு சின்சியாரிட்டி. மாநாடு படத்துக்கு கால்ஷீட் ஒதுக்குவதில் அவர் செய்த குளறுபடியில் நொந்து நூடுல்சான தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, படத்தை கைவிடுவதாக அறிவித்தார். பிறகு பலரும் பஞ்சாயத்து பேசி தொடங்கப்பட்ட படம்தான் மாநாடு. சரி, சிம்பு திருந்தினாரா?

    ஆம், அதற்கு இந்த வருட ஆரம்பத்தில் வெளியான ஈஸ்வரனே சாட்சி. குறுகிய காலத்தில் சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரனில் சிம்பு நடித்தார். மாநாடு படத்தையும் அதே ஒத்துழைப்புடன் நடித்துக் கொடுத்தார். வலிமை தீபாவளிக்கு வெளியாகவில்லை என்றதும் மாநாடு படத்தை தீபாவளிக்கு வெளியிட சுரேஷ் காமாட்சி முயற்சி செய்தார். அண்ணாத்த, எனிமி படங்கள் தீபாவளிக்கு வெளியாகிற நிலையில் மாநாடும் வெளியானால் குறைந்த திரையரங்குகளே கிடைக்கும் என்பதால் நவம்பர் 25-க்கு பட வெளியீட்டை சுரேஷ் காமாட்சி மாற்றி வைத்தார். இது மைக்கேல் ராயப்பன் மற்றும் பலரது சதி, தீபாவளிக்கு மாநாடு வெளியாகவில்லை என்றால் முதல்வர் வீட்டு முன் உண்ணாவிரம் இருப்பேன் என சிம்புவின் தாயார் ஸ்டன்ட் அடித்த கதையும் நடந்தது.

    தீபாவளிக்கு வெளியான எனிமி அப்போதே அவுட்டானது. அண்ணாத்த படத்துக்கும் கூட்டமில்லை. நவம்பர் 19 பெரிய படங்கள் எதுவும் வெளியாகவில்லை. இதனால், நவம்பர் 25 மாநாடு படத்தை திரையிட திரையரங்குகள் தயாராகிவிட்டன. படத்தின் விநியோக உரிமையை எஸ்எஸ்ஐ புரொடக்ஷன்ஸ் வாங்கியுள்ளது. அவர் அளித்த தகவலின்படி அனைத்து ஏரியாக்களும் விற்பனையாகிவிட்டது. திங்கள்கிழமை முதல் விளம்பரத்தை முடுக்கிவிட உள்ளனர்.

    மாநாடு படம் இன்னும் தணிக்கை செய்யப்படவில்லை. அடுத்த வாரமே படத்தை தணிக்கைக்குழுவுக்கு திரையிட உள்ளனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: