Home /News /entertainment /

சிம்புவின் 'மாநடு' 3 நாள் வசூல் எத்தனை கோடி தெரியுமா?

சிம்புவின் 'மாநடு' 3 நாள் வசூல் எத்தனை கோடி தெரியுமா?

மாநாடு

மாநாடு

3 நாட்களில் மாநாடு திரைப்படம் 22 கோடி வசூலித்திருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘மாநாடு’. இந்தப் படத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி, உதயா, அரவிந்த் ஆகாஷ், படவா கோபி, அஞ்சனா கீர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர். இதில் சிம்பு அப்துல் காலிக் என்ற முஸ்லிம் இளைஞனாக நடித்துள்ளார். யுவன்சங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

    பல தடைகளை தாண்டி கடந்த வெள்ளிக்கிழமை மாநாடு திரைப்படம் வெளியானது. இந்தப் படம் முதல் மூன்று நாட்களில் தமிழகத்தில் மட்டும் 22 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அதிகாரப்பூர்வமாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.





    வித்தியாசமான கதையமைப்பில் சுவாரசியமாக உருவாகியுள்ள இப்படத்துக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக செல்ஃபி வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Simbu, Venkat Prabhu

    அடுத்த செய்தி