ஹோம் /நியூஸ் /entertainment /

சிம்பு ரசிகர்களுக்கு குட் நியூஸ் : வெந்து தணிந்தது காடு தீபாவளிக்கு OTT-யில் ரிலீஸ்..

சிம்பு ரசிகர்களுக்கு குட் நியூஸ் : வெந்து தணிந்தது காடு தீபாவளிக்கு OTT-யில் ரிலீஸ்..

வெந்து தணிந்தது காடு

வெந்து தணிந்தது காடு

Actor Silambarasan's vendhu thaninthathu kaadu is all set to release on Amazon Prime for Diwali | நடிகர் சிலம்பரசனின் வெந்து தணிந்தது காடு படம் அமேசான் ப்ரைமில் தீபவாளிக்கு வெளியாக உள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • chennai, India

  நடிகர் சிம்புவின் நடிப்பில் வெந்து தணிந்தது காடு திரைப்படம் தமிழகம் முழுவதும் பல்வேறு திரையரங்கில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து OTT-யில் தீபாவளிக்கு வெளியாக உள்ளது.

  கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான்  இசையில் சிம்புவின் நடிப்பில் வந்த இந்த திரைப்படம் மக்களின் பெருத்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் (செப்.15) வெளியானது.

  வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் புதுமையான தோற்றத்தில் நடிகர் சிம்பு நடித்தார். அவருக்கு ஜோடியாக சித்தி இத்னானி நடித்தார். இந்த திரைப்படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

  இந்நிலையில், நடிகர் சிலம்பரசனின் வெந்து தணிந்தது காடு திரைப்படம் அமேசான் ப்ரைமில் தீபாவளிக்கு வெளியாக உள்ளது.

  இந்த படம் இரண்டு பாதிகளை கொண்டது. முதல் பாதியில் முத்து என்ற சிறுவன் வைத்து கதை நகரும். அந்த சிறுவன் வளர்ந்து ஒரு பெரிய ரவுடியாக மாறுவர்.

  இந்த படத்தில் சிம்பு வித்தியாசமான தோற்றத்தில் நடித்திருந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை இந்த படத்துக்கு மேலும் வலு சேர்த்தது. படத்தின் ஹைலைட் மல்லிப்பூ மற்றும் மறக்குமா நெஞ்சம் பாடல்கள் தான் .

  வேலைக்காக மும்பை செல்லும் சிம்பு பின்பு எப்படி ரவுடியாக மாறுகிறார் என்பது தான் படத்தின் கதை. படத்தின் இரண்டாம் பாகம் இருக்கிறது என்று கிளைமாக்ஸில் ஒரு காட்சி அமைத்து இருப்பார்கள்.

  Read More; நடிப்பு வேண்டாம்.. ஆனால் சினிமா வேண்டும் - திரைக்கதையில் ஜொலிக்க விரும்பும் ஷாருக் மகன்!

  இதற்கு முன்னர் பெரும் வெற்றி பெற்ற விண்ணை தாண்டி வருவாயா மற்றும் அச்சம் என்பது மடமையடா ஆகிய திரைப்படங்களிலும் இதே ஜி.வி.எம், ஏ.ஆர்.ரஹ்மான், சிம்பு கூட்டணி இருந்தது இந்த படத்திற்கு மேலும் வலுசேர்த்தது.

  Published by:Srilekha A
  First published:

  Tags: AR Rahman, Silambarasan