Home /News /entertainment /

லக்னோவில் சிம்புவின் வெந்து தணிந்தது காடு படப்பிடிப்பு!

லக்னோவில் சிம்புவின் வெந்து தணிந்தது காடு படப்பிடிப்பு!

வெந்து தணிந்தது காடு

வெந்து தணிந்தது காடு

வெந்து தணிந்தது காடு படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு லக்னோவில் நடைபெறுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
சிம்பு நடிக்கும் வெந்து தனித்து காடு படத்தின் இறுதி கட்ட பட பிடிப்பு லக்னோவில் நடைபெறுகிறது. 

கௌதம் வாசுதேவ் மேனன் - சிம்பு கூட்டணியில் வெந்து தணிந்தது காடு திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.  இதற்கான படப்பிடிப்பு பணிகள் ஏற்கனவே முடிவடைந்தன.

ஆனால் படத்தை எடிட் செய்து பார்த்த இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், ஒரு சண்டைக் காட்சியை இன்னும் சிறப்பாக உருவாக்க முடிவெடுத்தார். அதற்கான படப்பிடிப்பு தற்போது லக்னோவில் நடைபெற்று வருகிறது. அதில் சிம்பு உள்ளிட்டோர்களின் காட்சிகள் படமாக்கப்படுகின்றன. வெந்து தணிந்தது காடு படத்தின் பாடல் வெளியீட்டு விழா வரும் இரண்டாம் தேதி பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது.

இணையத்தில் லீக்கான விஜய் - ராஷ்மிகாவின் ரொமாண்டிக் படம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதற்காக பிரமாண்ட அரங்கம் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. லக்னோ படப்பிடிப்பை முடித்துக் கொண்டு சென்னை திரும்பும் கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் சிலம்பரசன் ஆகியோர் வெந்து தணிந்தது காடு படத்தின் பாடல் வெளியீட்டு விழாவிற்கு தயாராக உள்ளனர்.
Published by:Shalini C
First published:

Tags: Simbu

அடுத்த செய்தி