முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / மாநாடு தந்த உற்சாகம்... வெந்து தணிந்தது காடு படப்பிடிப்பில் சிம்பு

மாநாடு தந்த உற்சாகம்... வெந்து தணிந்தது காடு படப்பிடிப்பில் சிம்பு

சிம்பு

சிம்பு

தனுஷின் அசுரன் போல் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்ற சிம்புவின் ஆசையின் விளைவாக தயாராகி வரும் படம் தான் வெந்து தணிந்தது காடு.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

சிம்பு நடிப்பில் தயாராகி வரும் வெந்து தணிந்தது காடு குறித்த புதிய அப்டேட்டை அவரே தந்துள்ளார்.

சிம்பு நடிப்பில் மூன்று படங்கள் தயாராகின்றன. வெந்து தணிந்தது காடு, பத்து தல, கொரோனா குமாரு. இதில் வெந்து தணிந்தது காடு படத்துக்கு முக்கியத்துவம் தந்து நடித்து வருகிறார். திருச்செந்தூரில் இதன் படப்பிடிப்பு தொடங்கியது. அதன் பிறகு மும்பையில் முக்கியமான காட்சிகளை படமாக்கினர்.

மாநாடு படம் வெளியானனதை முன்னிட்டு அதன் புரமோஷன் நிகழ்ச்சிகள், சக்சஸ் பார்ட்டி, மும்பை ப்ரீமியர் ஷோ என்று சிம்பு பிஸியானதால் வெந்து தணிந்தது காடு படப்பிடிப்பு நடைபெறவில்லை. இப்போது அனைத்தும் அடங்கிய நிலையில் இன்று மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. சிம்பு கையில் துப்பாக்கியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, படப்பிடிப்பு தொடங்கியது என குறிப்பிட்டுள்ளார்.

வெந்து தணிந்தது காடு படத்தை கௌதம் வாசுதேவ மேனன் இயக்கி வருகிறார். ஜெயமோகன் கதை, ஐசரி கணேஷ் படத்தை தயாரிக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். தனுஷின் அசுரன் போல் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்ற சிம்புவின் ஆசையின் விளைவாக தயாராகி வரும் படம் தான் வெந்து தணிந்தது காடு. இதில் சிம்புவின் ஒல்லியான அழுக்கான கெட்டப் ரசிகர்களிடையே பேசு பொருளானது. மாநாடு வெற்றிக்குப் பின் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் சிம்புப் படமாக வெந்து தணிந்தது காடு உள்ளது. கௌதம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வாரா என்பதுதான் சந்தேகத்துக்குரிய கேள்வி.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Simbu