முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / பிரபல இளம் இயக்குநருடன் கைக்கோர்கும் சிம்பு - இசையமைக்கும் அனிருத் - வேற லெவல் காம்போ

பிரபல இளம் இயக்குநருடன் கைக்கோர்கும் சிம்பு - இசையமைக்கும் அனிருத் - வேற லெவல் காம்போ

சிம்பு

சிம்பு

நடிகர் சிம்பு தற்போது பத்து தல படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் அவரது அடுத்தப் படம் குறித்து தகவல் வெளியாகாமல் இருந்துவந்தது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற தன் முதல் படத்திலேயே ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தவர் இயக்குநர் தேசிங் பெரியசாமி. தேசிங் பெரியசாமி நடிகர் ரஜினிகாந்த்தின் மிகப்பெரிய ரசிகர். தனது படத்தில் பல இடங்களில் ரஜினிகாந்த்தின் பஞ்ச் லைன்களைப் பயன்படுத்தி கவனம் ஈர்த்தார்.

அதற்கேற்ப கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் பார்த்த ரஜினிகாந்த் இயக்குநர் தேசிங் பெரியசாமியை தொலைபேசி வாயிலாக அழைத்து பாராட்டினார். இதனையடுத்து ரஜினிகாந்தின் படத்தை தேசிங் இயக்கினால் நன்றாக இருக்கும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. அதற்கேற்ப ரஜினிகாந்த்தை சந்தித்து தேசிங் கதை சொன்னதாகவும் தகவல் வெளியானது. மேலும் சிவகார்த்திகேயன் படத்தை தேசிங் இயக்குவார் என்றும் ஒரு தகவல் பரவியது.

இந்த நிலை சிம்புவின் அடுத்தப் படத்தை தேசிங் இயக்குகிறாராம். இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைப்பதாக கூறப்படுகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். இந்தப் படமானது வரலாற்று பின்புலத்தில் உருவாகவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

நடிகர் சிம்பு தற்போது பத்து தல படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் அவரது அடுத்தப் படம் குறித்து தகவல் வெளியாகாமல் இருந்துவந்தது. கோகுல் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக இருந்த கொரோனா குமார் படமும் கைவிடப்பட்டது. இந்த நிலையில் சிம்பு - தேசிங் இணையவிருக்கும் தகவல் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

First published:

Tags: Anirudh, Simbu