Simbu: அடுத்தப் படத்தில் விஜய் பட தயாரிப்பாளருடன் இணையும் சிம்பு!

சிம்பு

இந்த நற்பெயர் பெரிய தயாரிப்பாளர்களையும் சிம்புவை நோக்கி திருப்பியுள்ளது.

  • Share this:
    படப்பிடிப்புக்கு வர மாட்டார், வந்தாலும் நடிக்க மாட்டார் என்ற அவப்பெயரை ஈஸ்வரன், மாநாடு படங்களில் மறக்கச் செய்தார் சிம்பு. சிம்புன்னா சின்சியாரிட்டி என சர்ட்டிபிகெட் தருகிறார்கள் இவ்விரு படங்களின் இயக்குனர்கள்.

    இந்த நற்பெயர் பெரிய தயாரிப்பாளர்களையும் சிம்புவை நோக்கி திருப்பியுள்ளது. விஜய்யின் பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் சிம்புவை வைத்து படம் தயாரிக்க, அவருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.

    தமிழ் திரையுலகில் 200 கோடி பட்ஜெட்டில் படம் தயாரிக்கும் வலிமையுள்ள நிறுவனங்கள் சொற்பமே உள்ளன. அதில் ஒன்று ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட். இவர்கள் கடைசியாக விஜய்யை வைத்து பிகில் படத்தை தயாரித்தனர். படத்தை இயக்கியது அட்லி எனும் போதே, ஏஜிஎஸ்ஸின் எதையும் தாங்கும் இதயத்தின் வலிமை புரிந்திருக்கும்.

    இவர்கள் சிம்புவை வைத்து அடுத்தப் படத்தை தயாரிக்கும் பொருட்டு சிம்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். முதல் கட்டப் பேச்சுவார்த்தை சிம்புக்கும், அர்ச்சனா கல்பாத்தி இருவருக்குமிடையில் நடந்துள்ளது. விரைவில் முறைப்படி அறிவிப்பு வெளிவரலாம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்த வருடம் சிம்பு நடிப்பில் ஈஸ்வரன் வெளியானது. விரைவில் மாநாடு வெளியாக உள்ளது. இவை தவிர ஹன்சிகாவின் 50-வது படமான மஹாவில் சிம்பு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். கௌதம் வாசுதேவ மேனன் அறிவித்த, நதிகளில் நீராடும் சூரியன் படமும் கைவசம் உள்ளது. சிம்பு அடுத்து நடிப்பது ஏஜிஎஸ் படமா இல்லை கௌதம் படமா என்பது இன்னும் சில தினங்களில் தெரிந்துவிடும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: