ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ஸ்டைலிஷான தோற்றத்தில் சிம்பு... வைரலாகும் படங்கள்!

ஸ்டைலிஷான தோற்றத்தில் சிம்பு... வைரலாகும் படங்கள்!

சிம்பு

சிம்பு

இயக்குநர் கெளதம் மேனனுடன் அவர் இணைந்துள்ள 'வெந்து தணிந்தது காடு' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

தன் கணவர் மஹத்துடன் சென்று நடிகர் சிம்புவை சந்தித்த புகைப்படத்தை பிராச்சி மிஸ்ரா இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

அப்போதும் சரி, இப்போதும் சரி இளைஞர்களின் இதயத்துடிப்பாய் வலம் வருகிறார் நடிகர் சிம்பு. அவரது திரைப்படங்கள் வெளியாகாமல் ரசிகர்கள் சிறிது ஏமாற்றம் அடைந்த போதிலும், ஈஸ்வரன் படத்தைத் தொடர்ந்து சிம்பு தற்போது ‘பத்து தல’, ‘மாநாடு’, ‘மஹா’, ‘வெந்து தணிந்தது காடு’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.


இதில் சிம்பு மாநாடு படத்தின் வேலைகளை நிறைவு செய்துள்ளார். ஹன்சிகாவுடன் அவர் இணைந்து நடித்துள்ள மஹா படத்தின் வெளியீட்டு தேதி விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு ’பத்து தல’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தவிர இயக்குநர் கெளதம் மேனனுடன் அவர் இணைந்துள்ள 'வெந்து தணிந்தது காடு' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில் தற்போது நடிகர் மஹத் ராகவேந்திராவும், அவரது மனைவி பிராச்சி மிஸ்ராவும் சிம்புவை சந்தித்திருக்கிறார்கள். அந்தப் படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் பிராச்சி. தவிர தனது ட்விட்டரில் வேறொரு படத்தையும் பகிர்ந்திருந்தார் சிம்பு. அந்தப் படங்களில் அவர் படு ஸ்டைலிஷாக தோற்றமளிக்கிறார். இதைப் பார்த்த ரசிகர்கள் அந்தப் படங்களை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published: