Home /News /entertainment /

STR இனிமேல் டாக்டர். சிலம்பரசன் டி.ஆர்... பட்டம் வழங்கி கவுரவித்தது வேல்ஸ் பல்கலைக் கழகம்

STR இனிமேல் டாக்டர். சிலம்பரசன் டி.ஆர்... பட்டம் வழங்கி கவுரவித்தது வேல்ஸ் பல்கலைக் கழகம்

சினிமாத்துறையில் சிம்புவின் பங்களிப்பு, அவரது திறமை உள்ளிட்டவற்றின் அடிப்படையில் அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் அளிக்கப்படும என்று, வேல்ஸ் பல்கலைக் கழகம் அறிவித்திருந்தது.

    சிம்புவுக்கு டாக்டர் பட்டத்தை வழங்கி வேல்ஸ் பல்கலைக் கழகம் கவுரவித்துள்ளது. இதனை அவரது ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

    மாநாடு படத்தின் மூலம் கம்பேக் கொடுத்த எஸ்.டி.ஆர், தற்போது வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து வருகிறார். இதனை, கவுதம் மேனன் இயக்கி வருவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சிம்பு, கவுதம் மேனன், ஏ.ஆர்.ரகுமான் கூட்டணி 3வது முறையாக இந்த படத்தில் இணைந்துள்ளது.

    Read Also : நடிகை நிதி அகர்வாலுடன் லிவிங் டுகெதரில் சிம்பு?  விரைவில் திருமணம்?

    சமீபத்தில் வெளியான வெந்து தணிந்தது காடு படத்தின் முன்னோட்ட காட்சிகளும், தீம் பாடலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இந்தப் படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் பேனரில், வேல்ஸ் பல்கலைக் கழக சேர்மன் ஐசரி கணேஷ் தயாரித்து வருகிறார்.

    இந்நிலையில் சினிமாத்துறையில் சிம்புவின் பங்களிப்பு, அவரது திறமை உள்ளிட்டவற்றின் அடிப்படையில் அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் அளிக்கப்படும என்று, வேல்ஸ் பல்கலைக் கழகம் அறிவித்திருந்தது.

    இதற்கும், தனது தயாரிப்பு நிறுனத்தில் சிம்பு நடிப்பதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று ஐசரி கணேஷ் விளக்கம் அளித்திருந்தார். சிம்புவை பாராட்டியிருந்த அவர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், பின்னணி பாடகர், இசையமைப்பாளர் என்பது உள்பட, உலக சினிமாவையும் நன்கு அறிந்தவர் சிம்பு என்று கூறியிருந்தார்.

    இந்நிலையில் பட்டமளிப்பு விழா இன்று காலை 10.30 மணியளவில் பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது. இதில் சிம்புவுக்கு வேல்ஸ் பல்கலைக் கழக சேர்மன் ஐசரி கணேஷ் டாக்டர் பட்டத்தை வழங்கி கவுரவித்தார்.

    சிம்புவுடன் தடகள வீரர் மாரியப்பன், விஜிபி குழும தலைவர் வி.ஜி. சந்தோசம் ஆகியோரும் டாக்டர் பட்டத்தை பெற்றுக் கொண்டனர்.

    இதையும் படிங்க : சாந்தனுவிடம் காதலை சொன்னது நான் தான் - வீடியோ வெளியிட்ட ஸ்ருதி ஹாசன்!

    Published by:Musthak
    First published:

    Tags: Silambarasan

    அடுத்த செய்தி