நடிகர் சிலம்பரசன் அடுத்த மாதம் 3ம்தேதி தனது 39வது பிறந்த நாளை கொண்டாடவுள்ளார். இதையொட்டி ரசிகர்களுக்கு அவர் வித்தியாசமான ட்ரீட்டை வைக்கப்போவதாக சமூக வலைதளங்கள் தகவல் பரவியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளில் வெளியான படங்களில், மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த செக்கச் சிவந்த வானம் சிம்புவுக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது. இதன்பின்னர் வந்தா ராஜாவாதான் வருவேன் படம் சுமாராக ஓடிய நிலையில், அதிக எடை காரணமாக சிம்பு, நெருக்கடிக்கு ஆளானார்.
பின்னர் ஈஸ்வரன் படத்திற்காக 20 கிலோ எடை குறைந்து கவனம் ஈர்த்த சிம்பு, மாநாடு படத்தில் டாப் கியருக்கு சென்று, மீண்டும் தமிழ் சினிமாவில் கம்பேக் கொடுத்துள்ளார். தற்போது அவர் நடித்து வரும் வெந்து தணிந்தது காடு படத்தின் ஷூட்டிங் நிறைவு பெறும் நிலையில் உள்ளது.
இதன்பின்னர் பத்து தல, கொரோனா குமார் உள்ளிட்ட படங்களில் சிம்பு நடித்து வருகிறார்.
தொடர்ந்து பெரிய பட்ஜெட் படங்களில் சிம்பு ஒப்பந்தம் ஆகி வருவதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இந்நிலையில் அடுத்த மாதம் 3ம் தேதி சிம்பு 39 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
முன்பு, தான் என்ன செய்து 20 கிலோ எடையை குறைத்தேன் என்பது குறித்த வீடியோக்களை வெளியிடுவதாக கூறியிருந்தார். இந்நிலையில் ரசிகர்களுக்கு பிறந்த நாள் ட்ரீட்டாக அந்த வீடியோக்கள் வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
உடல் எடை மாற்றம் குறித்தும் சிம்பு ஒரு வீடியோவில் பேசுவார் என்ற அவருக்கு நெருக்கமானவர்கள் கூறியுள்ளார்கள். இது, அவரது ரசிகர்களுக்கு இன்ஸ்பிரேஷனாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Published by:Musthak
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.