Home /News /entertainment /

சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு… உற்சாகத்தில் ரசிகர்கள்

சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு… உற்சாகத்தில் ரசிகர்கள்

வெந்து தணிந்தது காடு படத்தில் சிம்பு

வெந்து தணிந்தது காடு படத்தில் சிம்பு

Vendhu thanindhadhu Kadu : படத்தில் இடம்பெற்றுள்ள காலத்துக்கும் நீ வேணும் பாடல் வெளியாகி 12 மில்லியன் வியூஸ்களை நெருங்கியுள்ளது

    சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

    மாநாடு படத்தின் மூலம் கோலிவுட்டுக்கு கம்பேக் கொடுத்த சிம்பு, கவுதம் மேனன் இயக்கத்தில் 'வெந்து தணிந்தது காடு' என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்திருப்பதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகம் காணப்படுகிறது.

    ஏற்கனவே சிம்பு - கவுதம் மேனன் - ஏ.ஆர். ரகுமான் கூட்டணியில் விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையா படங்களின் பாடல்களும், படமும் மெகா ஹிட்டாகின.

    வெந்து தணிந்தது காடு படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக சிதி இட்னானி நடித்துள்ளார். ராதிகா சரத்குமார், சித்திக், நீரஜ் மாதவ், ஏஞ்செலினா ஆப்ரகாம் உள்ளிட்டோர் படத்தில் இடம்பெற்றுள்ளனர்.

    இதையும் படிங்க - 36 வருடங்களுக்கு முன்பு வெளியான கமலின் விக்ரம் வசூல் எவ்வளவு தெரியுமா?

    ஜெயமோகன் கதை எழுதியிருக்கும் இந்த படத்தை ஐசரி கணேஷ் தனது வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பாக தயாரிக்கிறார். சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவாளராகவும், எடிட்டராக ஆண்டனியும் படத்தில் பணியாற்றியுள்ளனர்.

    இந்நிலையில் வெந்து தணிந்தது காடு படம் செப்டம்பர் 15-ம்தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


    மிகவும் இயல்பான தோற்றத்தில் கிராமத்து இளைஞனாக டீசரின் சில காட்சிகளில் வரும் சிம்பு, ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறார். குடும்பக்கதை, த்ரில்லர் மற்றும் ஆக்சன் ஜேனரில் இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க - ஜெய்பீம் இயக்குனர் ஞானவேலுடன் மீண்டும் இணையும் சூர்யா...

    வெந்து தணிந்தது காடு  படத்தில் இடம்பெற்றுள்ள காலத்துக்கும் நீ வேணும் பாடல் வெளியாகி 12 மில்லியன் வியூஸ்களை நெருங்கியுள்ளது.

    சிம்பு தற்போது தனது தந்தை டி ராஜேந்தரின் சிகிச்சைக்காக குடும்பத்துடன் அமெரிக்காவில் உள்ளார்.
    Published by:Musthak
    First published:

    Tags: AR Rahman, Gautham Vasudev Menon, Simbhu

    அடுத்த செய்தி