Home /News /entertainment /

வெந்து தணிந்தது காடு படத்தின் டப்பிங்கை நிறைவு செய்தார் சிம்பு…

வெந்து தணிந்தது காடு படத்தின் டப்பிங்கை நிறைவு செய்தார் சிம்பு…

வெந்து தணிந்தது காடு படத்தில் சிம்பு

வெந்து தணிந்தது காடு படத்தில் சிம்பு

வெந்து தணிந்தது காடு டப்பிங் பணிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் அடுத்ததாக படத்திலிருந்து இன்னொரு பாடல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள வெந்து தணிந்தது காடு படத்தின் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்ற நிலையில், படத்தின் டப்பிங்கை சிம்பு நிறைவு செய்துள்ளார்.

    இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியாகிய படம் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பாக, ஐசரி கணேஷ் தயாரித்துள்ள இந்த திரைப்படம் செப்டம்பர் 15-ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகவுள்ளது.

    இந்த படத்தை கவுதம் மேனன் இயக்கியுள்ளார். விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களைத் தொடர்ந்து, 3வது முறையாக சிம்பு, கவுதம் மேனன், ஏ.ஆர். ரகுமான் கூட்டணி இந்த படத்தில் இணைந்திருக்கிறது.

    Chess Olympiad 2022: செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா இன்னும் பெரிதாகவும், சிறப்பாகவும் இருக்கும் - உதயநிதி ஸ்டாலின்!

    சிம்புவுக்கு ஜோடியாக சிதி இத்னானி நடித்துள்ளார். முக்கிய கேரக்டரில் ராதிகா சரத்குமார் இடம் பெற்றிருக்கிறார். வெந்து தணிந்தது காடு படத்திலிருந்து, ‘காலத்துக்கும் நீ வேணும்’ என்ற பாடல் வழியாக அதிக விருப்பங்களை பெற்று வருகிறது.

    தற்போது டப்பிங் பணிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் அடுத்ததாக படத்திலிருந்து இன்னொரு பாடல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கவுதம் மேனன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் கடைசியாக திரைக்கு வந்த எனை நோக்கி பாயும் தோட்டா திரைப்படம் போதிய வரவேற்பை பெறவில்லை.

    பாதுகாப்பு அளித்த போலீசாரை வீட்டிற்கு அழைத்து நன்றி தெரிவித்த ரஜினிகாந்த்...

    இதனால் நீண்ட நாட்களுக்கு பிறகு திரைக்கு வரும் வெந்து தணிந்தது காடு படத்தின் மீது கவுதம் மேனனின் ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பை வைத்துள்ளனர். சிம்பு நடிப்பில் தற்போது உருவாகி வரும் ‘பத்து தல’ என்ற படத்திற்கும் ஏஆர் ரகுமான் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Musthak
    First published:

    Tags: Gautham Vasudev Menon, Simbhu

    அடுத்த செய்தி