Home /News /entertainment /

‘பத்து தல’ படத்தின் அப்டேட்டை வெளியிட்ட சிம்பு… வைரலாகும் ஃபோட்டோஸ்

‘பத்து தல’ படத்தின் அப்டேட்டை வெளியிட்ட சிம்பு… வைரலாகும் ஃபோட்டோஸ்

பத்து தல படத்தில் சிம்பு

பத்து தல படத்தில் சிம்பு

ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வரும் இந்த படத்தை சில்லுனு ஒரு காதல் படத்தை இயக்கிய ஒபேலி கிருஷ்ணா இயக்கி வருகிறார்.

    பத்து தல படத்தின் அப்டேட்டை நடிகர் சிம்பு வெளியிட்டுள்ளார். தந்தையின் சிகிச்சையை வெற்றிகரமாக முடித்த நிலையில், சிம்பு வெளியிட்டிருககும் அப்டேட், அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கொரோனா லாக்டவுன் காலத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட சிம்பு தனது உடல் எடையை குறைத்து பழைய சிம்புவாக உருவெடுத்தார். மாநாடு படத்தின் மூலம் கோலிவுட்டுக்கு கம்பேக் கொடுத்த சிம்பு, தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் 'வெந்து தணிந்தது காடு' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

    வெந்து தணிந்தது காடு திரைப்படம் செப்டம்பர் 15-ம்தேதி திரைக்கு வரவுள்ளது. இதையடுத்து பத்து தல படத்தை விறுவிறுவென முடிக்கும் திட்டத்தில் உள்ளார் சிம்பு.

    ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி.ராமா ராவ் மகள் தூக்கிட்டு தற்கொலை…

    இப்படத்தை 'சில்லுன்னு ஒரு காதல்' புகழ் ஓபேலி கிருஷ்ணா இயக்குகிறார். கன்னடத்தில் ஷிவ ராஜ்குமார், ஸ்ரீமுரளி நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற 'முப்தி' படத்தின் ரீமேக்கே தமிழில் பத்து தல ஆகும். இப்படத்தை கன்னடத்தில் அறிமுக இயக்குனர் நார்த்தன் இயக்கியிருந்தார்.

    இப்படத்தில் கௌதம் கார்த்திக் போலீஸ் அதிகாரியாகவும், சிம்பு கேங்ஸ்டராகவும் நடிக்கின்றனர்.



    பத்து தல படத்தில் நாயகியாக பிரியா பவானி சங்கர், மெட்ராஸ் புகழ் கலையரசன், மனுஷியபுத்திரன் மற்றும் அசுரன் புகழ் டீஜய் ஆகியோரும் நடிக்கின்றனர்.

    1

    ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வரும் இந்த படத்தை சில்லுனு ஒரு காதல் படத்தை இயக்கிய ஒபேலி கிருஷ்ணா இயக்கி வருகிறார்.

    இணையத்தில் வெளியான சூரரைப் போற்று படத்தின் நீக்கப்பட்ட சண்டைக் காட்சி!

    கடந்த சில வாரங்களாக பல்வேறு காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பத்து தல படத்தின் ஷூட்டிங் கர்நாடக மாநிலம் பெல்லாரியில் மீண்டும் தொடங்கியுள்ளது.



    இதுதொடர்பாக சிம்பு வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகியுள்ளன. பத்து தல படத்தை முடித்துக் கொடுத்த பின்னரே, அடுத்த படத்தில் சிம்பு இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த படத்தில் அவரை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
    Published by:Musthak
    First published:

    Tags: Simbu

    அடுத்த செய்தி