பல வெளியீட்டு தேதிகளையும், வரும் வராது என்ற இழுபறிகளையும் கடந்து மாநாடு நேற்று திரைக்கு வந்தது.
படத்தைப் பார்த்த ரசிகர்கள், விமர்சகர்கள் என ஒருவர் விடாமல் அனைவரும், படம் சூப்பர் என ஒரே குரலில் கூறகின்றனர். இந்த வாய்மொழி விளம்பரத்தால் மாநாடு ஓடும் திரையரங்குகளில் ரசிகர்கள் திரள்கிறார்கள்.
கேரளாவில் சிம்பு படத்துக்கு அத்தனை வரவேற்பு இருப்பதில்லை. குறைவான திரையரங்குகளிலேயே படம் வெளியாகும். மாறாக மாநாடு படத்தை வழக்கத்தைவிட அதிக திரையரங்குகளில் வெளியிட்டன. படத்திற்கு கிடைத்த பாஸிடிவ் விமர்சனங்களால் கேரளாவில் இரண்டாவது நாளான இன்று காட்சிகளையும், திரையரங்குகளின் எண்ணிக்கையையும் அதிகரித்துள்ளனர்.
கொரோனா இரண்டாம் அலைக்குப் பின் மலையாளத்தில் வெளியான ஸ்டார், ஆகா, ஜானேமன், லால்பாக், எல்லாம் சரியாகும் உள்பட எந்தப்படமும் ரசிகர்களை கவரவில்லை. விதிவிலக்கு குருப். அதுவும் கொஞ்சம் கிளாஸிக் டச்சுடன் அமைந்த படம். மாநாடு படமே முழுக்க ரசிகர்களை என்டர்டெயின் செய்யும் விதத்தில் வெளியாகியுள்ளது.
அதனால், கேரளாவிலும் படம் இன்ஸ்டன்ட் ஹிட்டாகியுள்ளது. ஆனால், ஒரேயொரு பிரச்சனை, டிசம்பர் 2 ஆம் தேதி மோகன்லாலின் மரைக்கயார் - அரபிக் கட்லின்டெ சிம்ஹம் வெளியாகிறது. கேரளாவின் 80 சதவீத திரையரங்குகளில் இப்படம் வெளியாக உள்ளது. இதன் காரணமாக மாநாடு ஒரே வாரத்தில் கேரளாவில் முக்கால்வாசி திரையரங்குகளிலிருந்து தாக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. கொரானா இரண்டாம் அலைக்குப் பின் வெளியான படங்களில் நிஜமான ப்ளாக் பஸ்டராக மாநாடு இருக்கப் போகிறது.
Published by:Vinothini Aandisamy
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.