Simbu: சிம்பு திருமண பரிகாரம்? வைரலாகும் படம்

Simbu: சிம்பு திருமண பரிகாரம்? வைரலாகும் படம்

சிம்பு

கையில் விளக்கு ஏந்தி அதை ஆற்றில் விடும் படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

  • Share this:
    நடிகர் சிம்பு வாரணாசி கோயிலில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில், சிம்பு நடித்திருந்த ‘ஈஸ்வரன்’ திரைப்படம் கடந்த மாதம் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாகி, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் மாநாடு படத்தில் அவர் நடித்து வருகிறார்.

    அதோடு பத்து தல, இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படம் என பிஸியாக இருக்கிறார் சிம்பு. இந்நிலையில் அவர் கையில் விளக்கு ஏந்தி அதை ஆற்றில் விடும் படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

    சிம்பு உத்திரபிரதேச மாநிலம் வாரணாசிக்கு சென்று, அங்குள்ள பிரசித்திப் பெற்ற கங்கை ஆற்றில் தீபம் ஏற்றி வழிபட்டுள்ளது இதன் மூலம் தெரிய வந்திருக்கிறது. கங்கை ஆற்றில் விளக்கேற்றி அவர் பரிகாரம் செய்ததாகவும், தனக்கு திருமணமாக வேண்டி இப்படி கங்கைக்கு திடீர் விசிட் அடித்ததாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: