Maanaadu Simbu: மண் தரையில் தூங்கிய சிம்பு - வைரலாகும் படம்!

Maanaadu Simbu: மண் தரையில் தூங்கிய சிம்பு - வைரலாகும் படம்!

சிம்பு

மாநாடு படப்பிடிப்பு தளத்தில் மண் தரையில் நடிகர் சிம்பு படுத்துத் தூங்கிய புகைப்படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இந்தப் படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  • Share this:
    மாநாடு படப்பிடிப்பு தளத்தில் மண் தரையில் நடிகர் சிம்பு படுத்துத் தூங்கிய புகைப்படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இந்தப் படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘மாநாடு’. இந்தப் படத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி, உதயா, அரவிந்த் ஆகாஷ், படவா கோபி, அஞ்சனா கீர்த்தி மற்றும் பலர் நடித்து வருகின்றனர். யுவன்சங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். அவரின் பாடல்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள்.

    இதன் படப்பிடிப்பு முன்பே தொடங்கிவிட்டாலும், கொரோனா காரணமாக மற்ற படங்களைப் போல், இதன் ஷூட்டிங்கும் பாதிக்கப்பட்டது. பின்னர் லாக்டவுன் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதும், மீண்டும் வேலைகள் தொடரப்பட்டது. அரசியலை மையப்படுத்தி உருவாக்கப்பட்டு வரும் மாநாடு படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத், பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வந்தது. இதற்கிடையே படத்தின் போஸ்டர்கள், மோஷன் போஸ்டர் மற்றும் டீசர் ஆகியவை வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.



    இந்நிலையில் இயக்குநர் வெங்கட்பிரபு சிம்புவின் 2 படங்களை தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். 'நடிகர்களின் வாழ்க்கை, எளிய மனிதர், ஷாட்டுகளுக்கு இடையே எடுத்த கேண்டிட் படம்’ என அதனைக் குறிப்பிட்டிருக்கிறார். ஒரு படத்தில் மண் தரையில் படுத்துத் தூங்கிக் கொண்டிருக்கிறார் சிம்பு. இன்னொரு படத்தில் தரையில் படுத்திருக்கும் சிம்புவின் பக்கத்தில் நின்று பேசிக் கொண்டிருக்கிறார் நடிகர் எஸ்.ஜே.சூர்யா. இந்தப் படங்களைப் பார்த்த சிம்பு ரசிகர்கள் உடனே சமூக வலைதளங்களில் ஷேர் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.

    தவிர அந்தப் படத்தில் போலீஸ் உடையில் எஸ்.ஜே.சூர்யா இருக்கிறார். ஏற்கனவே மாநாடு படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்துவிட்டதால், இது க்ளைமேக்ஸ் காட்சிக்கான படப்பிடிப்பாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. படத்திற்காக முழு ஒத்துழைப்பு கொடுத்து நடித்து வருகிறாராம் சிம்பு. கொரோனா காலத்திலும், தவறாமல் படப்பிடிப்புக்குச் சென்று படக்குழுவினரை ஆச்சர்யப்படுத்தினாராம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    First published: