Home /News /entertainment /

சம்பளத்தை குறைக்க முன்வந்த விஜய், அஜித்: பட வெற்றியால் சம்பளத்தை உயர்த்திய சிம்பு, சிவகார்த்திகேயன்

சம்பளத்தை குறைக்க முன்வந்த விஜய், அஜித்: பட வெற்றியால் சம்பளத்தை உயர்த்திய சிம்பு, சிவகார்த்திகேயன்

சிம்பு சிவகார்த்திகேயன்

சிம்பு சிவகார்த்திகேயன்

Simbu | Sivakarthikeyan | தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்கள் திடீரென சம்பளத்தை உயர்த்தியதால் தயாரிப்பாளர்கள் கதி கலங்கி போய் உள்ளனர்.

    கொரோனா பரவல், ஆன்லைன் பைரசி, ஆன்லைன் கட்டணம் என தமிழ் சினிமாவை பல சிக்கல்கள் சூழ்ந்துள்ள நிலையில் இதில் முன்னணி நடிகர்களின் சம்பள விவகாரமும் தவிர்க்கமுடியாத ஒரு பிரச்னையாக உள்ளது. இதை உணர்ந்து சில சீனியர் நடிகர்கள் தங்களுடைய சம்பளத்தை கணிசமாக குறைத்துக் கொள்ள முன்வந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அஜித்தின் வலிமை படம் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தயாரிப்பில் இருப்பதால் தயாரிப்பாளர் போனி கபூருக்கு நிதி சிக்கல் ஏற்பட்டிருப்பதாகவும் இதை உணர்ந்த நடிகர் அஜித் வலிமை படம் எதிர்பார்த்த அளவு வசூல் செய்யாவிட்டால் அடுத்த படத்தில் தன்னுடைய சம்பளத்தை குறைத்துக் கொள்ள முன் வந்திருப்பதாக சொல்லப்படுகிறது. அஜித் கொடுத்த இந்த நம்பிக்கையினாலே வலிமை படத்தின் ரிலீசை போனிகபூர் ஒத்தி வைத்தார் என்றும் பேசப்படுகிறது.

    அஜித்தைப் போலவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் அண்ணாத்த படம் எதிர்பார்த்த வசூல் கொடுக்காததால் தன்னுடைய அடுத்த படத்தில் கணிசமான அளவில் சம்பளத்தை குறைக்க முன் வந்திருப்பதாகவும் இது தொடர்பான பேச்சுவார்த்தை சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கும் ரஜினி தரப்பினருக்கும் இடையே நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

    இருபது நிமிட காட்சிக்கு 9 கோடி சம்பளம் வாங்கிய ஆலியா பட்...!



    தமிழ் சினிமாவின் மற்றொரு உச்ச நட்சத்திரமான விஜய் இதில் சற்று வித்தியாசமான பாணியை கையாள்கிறார். இவருடைய படங்கள் பாக்ஸ் ஆபீஸில் 300 கோடி வரை வசூல் செய்வதாக சொல்லப்பட்டாலும் தயாரிப்பாளர்களுக்கு போதிய லாபம் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் உண்டு. இதை சரி செய்யும் வகையில் மெர்சல், மாஸ்டர் படங்களை தயாரித்த நிறுவனங்களுக்கு மீண்டும் கால்ஷீட் கொடுக்க முன் வந்திருக்கும் விஜய், இந்தமுறை தயாரிப்பாளர்களுக்கு அதிக லாபம் கிடைக்கும் வகையில் அந்த படங்களை வடிவமைக்கவும் திட்டமிட்டுள்ளார்.

    சீனியர் நடிகர்களே இப்படி தயாரிப்பாளர்களின் கோரிக்கைக்கு செவிசாய்த்து வரும் வேளையில் வளர்ந்து வரும் நடிகர்கள் தங்களுடைய சம்பளத்தை அதிரடியாக உயர்த்தி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    டாக்டர் படத்தின் வெற்றியால் உற்சாகமடைந்த நடிகர் சிவகார்த்திகேயன் அதே வேகத்தில் தன்னுடைய சம்பளத்தை 30 கோடியாக உயர்த்தி இருப்பதாக கூறப்படுகிறது. ஒரே நேரத்தில் தமிழ் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் புதிய படம் ஒன்றில் நடிக்கும் சிவகார்த்திகேயன் இந்த படத்துக்காக இதுவரை வாங்காத அளவு 30 கோடி ரூபாயை சம்பளமாக பெறுவதாகவும் இதன் மூலமாக அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியலில் முதல் 5 இடங்களில் சிவகார்த்திகேயன் இணைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

    இதேபோல் மாநாடு படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து நடிகர் சிம்புவும் தன்னுடைய சம்பளத்தை இரட்டிப்பாக உயர்த்தி இருப்பதாக சொல்லப்படுகிறது. இது நாள் வரை பத்து கோடிக்கும் குறைவாகவே சம்பளம் பெற்று வந்த சிம்பு மாநாடு படம் 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்ததால் தன்னுடைய சம்பளத்தை 20 கோடிக்கும் அதிகமாக உயர்த்தி இருப்பதாக சொல்லப்படுகிறது.

    இப்படி தியேட்டரில் கிடைத்த வெற்றியின் மூலம் சிம்பு, சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்கள் சம்பளத்தை உயர்த்தியதால் மற்ற முன்னணி நடிகர்களும் தங்களுடைய படங்களை தியேட்டரில் வெளியிடவே அதீத ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    தமிழை விட கூடுதலாக மார்க்கெட் கொண்டிருக்கும் தெலுங்கு நடிகர்கள் கூட 30 முதல் 50 கோடி வரை மட்டுமே சம்பளம் பெற்று வரும் நிலையில் தமிழில் வளர்ந்து வரும் நடிகர்கள் கூட படத்துக்கு படம் தங்களுடைய சம்பளத்தை உயர்த்துவது தயாரிப்பாளர்களுக்கு வேதனை தரும் செய்தியாக அமைந்துள்ளது.
    Published by:Karthick S
    First published:

    Tags: Simbu, Sivakarthikeyan

    அடுத்த செய்தி