தந்தையின் உடல்நிலைக் குறித்து நடிகர் சிம்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
டி.ராஜேந்தர் தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரும் நடிகரும், முன்னணி நடிகர் சிலம்பரசனின் தந்தையும் ஆவார். மே 7-ஆம் தேதி அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், அதன் பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் சிம்புவோ அவரது குடும்பத்தினரோ இது குறித்து எதுவும் பொதுவெளியில் அறிவிக்கவில்லை. இருப்பினும், டி.ராஜேந்தர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி நேற்று இரவு சமூக வலைதளங்களில் கசிந்தது. இதையடுத்து அவர் குணமடைய ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது தனது தந்தையின் உடல்நிலை குறித்து நடிகர் சிம்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “எனது தந்தைக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதைத் தொடர்ந்து, தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்தோம். அப்போது அவருக்கு வயிற்றில் சிறிய ரத்த கசிவு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்தது.
விஜய்யுடன் மீண்டும் இணையும் வெற்றி இயக்குநர்?
அவருக்கு உயர் சிகிச்சை தர வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், அவரை வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்கிறோம். தற்போது அவர் முழு சுய நினைவுடன் நலமாக உள்ளார். கூடிய விரைவில் சிகிச்சை முடிந்து உங்கள் அனைவரையும் சந்திப்பார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.