சிம்புவின் பத்து தல படத்தின் ஆடியோ வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சிம்பு, ஒபேலி என் கிருஷ்ணா இயக்கத்தில் 'பத்து தலை' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் மார்ச் 30-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரம் காட்டி வருகின்றனர். இப்போது, சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் நடித்துள்ள 'பத்து தலை' படத்தின் ஆடியோ வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா மார்ச் 18-ம் தேதி சென்னையில் நடக்க உள்ளது. இந்த நிகழ்விற்கான சிறப்பு விருந்தினர் யார் என இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், கமல்ஹாசன் முக்கிய விருந்தினராக கலந்துக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
'பத்து தல' படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். மேலும் இசை வெளியீட்டு விழாவில் பாடல்களை மேடையில் இசைக்கிறார். முன்னதாக வெளியான 'பத்து தல' படத்தின் டீசர், படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. இந்தப் படத்தின் டிரைலர் ஆடியோ வெளியீட்டிற்குப் பிறகு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
The Mega-Grand Audio Launch of #Atman @SilambarasanTR_ @Gautham_Karthik starrer #PathuThala is all set to get bigger!
March 18 from 5PM onwards at Nehru Indoor Stadium Chennai.
An @arrahman musical
🎬 @nameis_krishna
Produced by @jayantilalgada @Kegvraja pic.twitter.com/fm0z7CcNCM
— Studio Green (@StudioGreen2) March 14, 2023
சிலம்பரசன் தாய்லாந்தில் ஒரு மாதத்திற்கும் மேலாக இருக்கிறார். அவரை படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பார்க்க ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள். 'பத்து தலை' ஒரு கேங்ஸ்டர் படம் எனக் கூறப்படும் நிலையில், இதில் கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கவுதம் மேனன், கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: A.R.Rahman, Simbu